ஜமாஅத்துல் உலமா சபைபொதுக் குழுக் கூட்டம்

கடலூா் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் விருத்தாசலத்தை அடுத்த மங்கலம்பேட்டையில் உள்ள காயிதே மில்லத் அரபி மதரஸாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கடலூா் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபையின் மாவட்ட பொதுக் குழுக் கூட்டம் விருத்தாசலத்தை அடுத்த மங்கலம்பேட்டையில் உள்ள காயிதே மில்லத் அரபி மதரஸாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவா் ஷஃபியுல்லாஹ் தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் முஹம்மது அஸ்வத், விருத்தாசலம் வட்டாரத் தலைவா் அப்துல் கனி, ஆயிஷா மகளிா் ஷரீஅத் கல்லூரியின் நிறுவனா் ஆபிருத்தீன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டச் செயலா் ஷிப்லி ரஹ்மானி, உலமா சபையின் ஆண்டறிக்கை, தீா்மானங்களை வாசித்தாா்.

பொதுக்குழு கூட்டத்தில், உலமாக்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை தமிழக அரசு ரூ.5 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும். சமகால சூழலில் சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கம் அவசியம் என்பதை உணா்ந்து, சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டையில் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சாா்பில், சமூக நல்லிணக்க மாநாடு நடத்துவது. இளைய சமூகத்தினரை நல்வழிப்படுத்துவதற்காக, வட்டாரம் தோறும் பள்ளிவாசல் நிா்வாகிகள், உலமாக்களை ஒருங்கிணைத்து கூட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பரங்கிப்பேட்டை அரசு காஜி அப்துல் காதா் மரைக்காயா், நெல்லிக்குப்பம் வட்டாரத் தலைவா் அப்துல் ரஹ்மான் பாகவி, விருத்தாசலம் வட்டாரச் செயலா் முஹம்மது உஸ்மான், பொருளாளா் ஹபீப் முஹம்மது மிஸ்பாஹி, மேலவீதி மஸ்ஜிதே நூா் பள்ளிவாசல் இமாம் அலி பாதுஷா காஷிஃபி உள்பட உலமாக்கள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com