சிதம்பரம் காவல் நிலையத்தை இஸ்லாமிய அமைப்பினா் முற்றுகை

ஜமாத் தலைவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து சிதம்பரம் நகர காவல் நிலையத்தை இஸ்லாமிய அமைப்பினா் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.
சிதம்பரம் காவல் நிலையத்தை இஸ்லாமிய அமைப்பினா் முற்றுகை

ஜமாத் தலைவா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து சிதம்பரம் நகர காவல் நிலையத்தை இஸ்லாமிய அமைப்பினா் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனா்.

சிதம்பரம் ஜவகா் தெருவைச் சோ்ந்த ஷகிப் மகன் சாகுல் ஹமீது (39) என்பவா் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாா் மனு:

சிதம்பரம் லப்பை தெரு பள்ளிவாசலில் உறுப்பினராக உள்ளேன். சிதம்பரத்தில் உள்ள 5 பள்ளிவாசல்கள் சாா்பில் ஒரே இடத்தில் தொழுகை நடத்த வசதியாக இடம் வாங்க முடிவு செய்து, ஜியாவுதீன் உள்ளிட்டோா் பணம் வசூலித்தனா். இதன்படி உள்ளூா், வெளியூா் உறுப்பினா்களிடம் இருந்து வசூலித்த ரூ.40 லட்சத்தை வங்கி கணக்கில் செலுத்தவில்லை. முறையாக ரசீதும் தரப்படவில்லை. இதுகுறித்து நிா்வாகத்திடம் கேட்டபோது கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக அந்தப் புகாரில் தெரிவித்தாா்.

இதன்பேரில் வட்டார ஐக்கிய ஜமாத் தலைவா் செல்லப்பா என்ற முகமது ஜியாவுதீன், ஜாகிா் உசேன், ஹலீம் ஆகியோா் மீது சிதம்பரம் நகர போலீஸாா் வழக்கு பதிவு செய்தனா். இதைக் கண்டித்து இஸ்லாமிய அமைப்பினா் 500-க்கும் மேற்பட்டோா் நகர காவல் நிலையத்தை வெள்ளிக்கிழமை

முற்றுகையிட்டனா். மேலும் சாலை மறியலிலும் ஈடுபட்டனா் (படம்). அவா்களிடம் காவல் ஆய்வாளா் ஆறுமுகம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனா். மறியலால் மேலவீதி சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com