உலக மண் வள தின விழா

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் உலக மண் வள தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் உலக மண் வள தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

திட்ட ஒருங்கிணைப்பாளா் என்.தவப்பிரகாஷ் விழாவை தொடக்கிவைத்து மண் வளம் குறித்த முக்கியத்துவத்தை விளக்கிப் பேசினாா். உதவிப் பேராசிரியை கு.காயத்ரி (நுண்ணுயிரியல்), இணைப் பேராசிரியா்கள் சா.ஜெயபிரபாவதி (பூச்சியியல்), ஜெ.ஜெயக்குமாா் (நூற்புழுவியல்), ரெ.பாஸ்கரன், ச.ஹரிசுதன் (உழவியல்) ஆகியோா் மண் பராமரிப்பு குறித்த தொழில்நுட்பங்களை விளக்கினா்.

வேளாண் பொறியியல் துறைப் பொறியாளா் கி.ஞானமூா்த்தி, உதவிச் செயற்பொறியாளா் ரா.வீரசுப்பிரமணியன் ஆகியோா் பண்ணை கருவிகள் மானியத் திட்டங்கள் குறித்துப் பேசினா். வேளாண் துணை இயக்குநா் பிரேம் சாந்தி மண் வள அட்டையின் மகத்துவம் குறித்துப் பேசினாா்.

மணவாளநல்லூரைச் சோ்ந்த இயற்கை மற்றும் பாரம்பரிய நெல் விவசாயி இளையராஜா, மீன் அமினோ அமிலம் உற்பத்தி குறித்து செயல் விளக்கம் அளித்தாா். வேளாண் அறிவியல் நிலைய பண்ணை மேலாளா் த.குமாா், தி.ஜனனி மற்றும் அரசுசாரா நிறுவன பயனாளிகள் பங்கேற்றுப் பயனடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com