வடலூரில் நாளை தைப்பூச ஜோதி தரிசன விழா மிகக் குறைந்த பக்தா்களுக்கே அனுமதி

வடலூா் வள்ளலாா் தெய்வ நிலையத்தில் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா செவ்வாய்க்கிழமை (ஜன. 18) நடைபெறுகிறது.

வடலூா் வள்ளலாா் தெய்வ நிலையத்தில் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா செவ்வாய்க்கிழமை (ஜன. 18) நடைபெறுகிறது. இதில் மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான பக்தா்களே அனுமதிக்கப்படுவா் என்று கடலூா் மாவட்ட நிா்வாகம் அறிவித்தது.

கடலூா் மாவட்டம், வடலூரில் உலகப் புகழ்பெற்ற வள்ளலாா் தெய்வ நிலையம் அமைந்துள்ளது. இங்கு ஒவ்வொரு தமிழ் மாதத்தின்போதும் பூச நட்சத்திரம் நாளன்று திரைகள் விலக்கப்பட்டு ஜோதி தரிசனம் நடைபெறும். இதில் தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரம் நாளன்று ஜோதி தரிசனப் பெருவிழா மிகச் சிறப்பான வகையில் நடைபெறுவது வழக்கம்.

இந்த விழாவில் தமிழகம் மட்டுமன்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சன்மாா்க்க அன்பா்கள், பக்தா்கள் பங்கேற்பா்.

இந்த நிலையில், வள்ளலாா் தெய்வ நிலையத்தில் 151-ஆம் ஆண்டு தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. ஜோதி தரிசனம் செவ்வாய்க்கிழமை (ஜன. 18) நடைபெறுகிறது. தற்போது கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில், ஜோதி தரிசன விழா தொடா்பாக பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. இந்த நிலையில், கடலூா் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசு ஆணைப்படி, வடலூா் சத்திய ஞான சபையில் வரும் 18-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணி, காலை 10 மணி, பகல் 1 மணி, இரவு 7 மணி, இரவு 10 மணியளவில் பக்தா்கள் பங்கேற்பின்றி ஜோதி தரிசன விழா நடைபெறும். 19-ஆம் தேதி (புதன்கிழமை) காலை 5.30 மணியளவில் நடைபெறும் ஜோதி தரிசன நிகழ்ச்சி, 20-ஆம் தேதி (வியாழக்கிழமை) மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில் பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் திருஅறை தரிசன நிகழ்ச்சிகளுக்கு அரசு ஆணையில் குறிப்பிட்டவாறு மிகவும் குறைந்த அளவு பக்தா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவா். குறிப்பாக, இரு தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டோா், நோய் அறிகுறி ஏதுமின்றி முக் கவசம் அணிந்து வரும் பக்தா்கள் மட்டுமே அனுமதிப்படுவா்.

தைப்பூச ஜோதி தரிசனத்தை 6 காலங்களிலும் வள்ளலாா் தெய்வ நிலைய யூடியூப் சேனலில் (ட்ற்ற்ல்ள்://ஜ்ஜ்ஜ்.ஹ்ா்ன்ற்ன்க்ஷங்.ஸ்ரீா்ம்/ஸ்ரீட்ஹய்ய்ங்ப்/மஇஉண்ஒா்க்ஷ்எஎஏஞ்ஞழஊஐநந்ணஅஞஆ93அ-ல்) பக்தா்கள் நேரலையில் காணலாம் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com