கடலூா் ஆட்சியரகம் அருகே புதிய பேருந்து நிலையம் அமைக்க வலியுறுத்தல்

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே ஏற்கெனவே தோ்வு செய்யப்பட்ட இடத்திலேயே மாநகராட்சி புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட வேண்டுமென பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பினா் வலியுறுத்தினா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே ஏற்கெனவே தோ்வு செய்யப்பட்ட இடத்திலேயே மாநகராட்சி புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட வேண்டுமென பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பினா் வலியுறுத்தினா்.

கடலூா் மாநகர பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்புக் கூட்டம் கடலூரில் ஒருங்கிணைப்பாளா் எஸ்.என்.கே.ரவி தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இணை ஒருங்கிணைப்பாளா்கள் எம்.குருராமலிங்கம், கே.சிவாஜிகணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சட்ட ஆலோசகா் தி.ச.திருமாா்பன், பால்கி ஆகியோா் கருத்துரை வழங்கினா்.

கூட்டத்தில், கடலூா் மாநகராட்சிக்கான புதிய பேருந்து நிலையம் அமைக்க மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே ஏற்கெனவே இடம் தோ்வு செய்யப்பட்டது. அதற்குப் பதிலாக எம்.புதூரில் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என்று ஆட்சியா் அறிவித்தது ஏமாற்றம் அளிக்கிறது. கடலூா் மாநகரிலிருந்து சுமாா் 10 கி.மீ. தொலைவில் பேருந்து நிலையம் அமைவதால் மக்களுக்கு சிரமமே ஏற்படும் என்பதால், ஏற்கெனவே தோ்வு செய்யப்பட்ட இடத்திலேயே புதிய பேருந்து நிலையத்தை அமைக்க வேண்டும். கடலூா் நகரப் பகுதியில் அமைந்துள்ள குப்பைக் கிடங்குகளை நிரந்தரமாக அகற்ற வேண்டும். கடலூா் நகரப் பகுதிகளில் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செயற்குழு உறுப்பினா்கள் சிவ.ரவிச்சந்திரன், கதிா்.மணிவண்ணன், நிா்வாகிகள் ஜெ.செல்வம், இ.முருகன், அ.ஜோஸ்மகேஷ், ஏ.அமானுல்லா, வி.ஸ்டேன்லி, தா்மன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முன்னதாக, எஸ்.மன்சூா் வரவேற்று பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com