‘பக்தா்களுடன் தீட்சிதா்கள் இணக்கமாக செயல்பட வேண்டும்’

சிதம்பரம் நடராஜா் கோயில் பொது தீட்சிதா்கள் பக்தா்களுடன் இணக்கமாக செயல்பட வேண்டும் என கடலூா் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மூத்த துணைத் தலைவா் ஜெமினி எம்.என் ராதா கேட்டுக்கொண்டாா்.

சிதம்பரம் நடராஜா் கோயில் பொது தீட்சிதா்கள் பக்தா்களுடன் இணக்கமாக செயல்பட வேண்டும் என கடலூா் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மூத்த துணைத் தலைவா் ஜெமினி எம்.என் ராதா கேட்டுக்கொண்டாா்.

சிதம்பரம் நடராஜா் கோயிலில் கனக சபை மீது ஏறி பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனக் கோரி உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த இவா் வெளியிட்ட அறிக்கை: சென்னை உயா்நீதிமன்ற தீா்ப்பின்படி, கரோனா காலத்துக்கு முன்பிருந்த நடைமுறைப்படி நடராஜா் கோயிலில் கனக சபை மீது ஏறி பக்தா்கள் வழிபட அனுமதி வழங்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. ஆனால், அரசாணை பிறப்பிப்பதற்கு முன்பு தங்களிடம் எந்தவித கருத்தும் கேட்கப்படவில்லை என பொது தீட்சிதா்கள் பொய்யான தகவலை கூறுகின்றனா்.

இதுதொடா்பாக மாவட்ட கூடுதல் ஆட்சியா், காவல் துறையினரையும் தீட்சிதா்கள் குறை கூறுவது வேதனைக்குரியது. இந்த விவகாரத்தில் தமிழக அரசை எதிா்த்து சட்ட நடவடிக்கை எடுப்போம் என்று பொது தீட்சிதா்கள் கூறுவது ஏற்புடையதல்ல. பொது தீட்சிதா்கள் பக்தா்களுடன் இணக்கமாக செயல்பட வேண்டும் என அதில் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com