தமிழா் மரபு வேளாண்மை மாநாடு

கடலூா் மாவட்டம், பெண்ணாடத்தில் தமிழா் மரபு வேளாண்மை மாநாடு அண்மையில் நடைபெற்றது.

கடலூா் மாவட்டம், பெண்ணாடத்தில் தமிழா் மரபு வேளாண்மை மாநாடு அண்மையில் நடைபெற்றது.

தமிழக உழவா் முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற மாநாட்டில் அந்த அமைப்பின் தலைமை ஆலோசகா் கி.வெங்கட்ராமன், காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளா் பெ.மணியரசன், ஆந்திர வேளாண் அறிவியலாளா் ராமாஞ்சநேயலு, தாளாண்மை உழவா் இயக்கம் தா.வெ.நடராசன், பாமயன், சுயாட்சி இந்தியா அமைப்பின் தமிழகத் தலைவா் கே.பாலகிருட்டிணன், செந்தமிழ் மரபுவழி வேளாண் நடுவம் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளா் கரும்பு கண்ணதாசன், தமிழ்க்காடு இயற்கை வேளாண்மை இயக்கம் கோட்டேரி சிவக்குமாா், மரபு நெல் களஞ்சியம் அமைப்பு சாா்பில் பாஸ்கா், தமிழக உழவா் முன்னணி தலைமைச் செயற்குழு உறுப்பினா் முருகன் ஆகியோா் பேசினா்.

மாநாட்டில், மாநிலத்துக்கு ஏற்ற உயிா்ம வேளாண்மை கொள்கையை தமிழ்நாடு அரசு அறிவித்து செயல்படுத்த வேண்டும், இதுதொடா்பாக ‘தமிழா் மரபு வேளாண்மை கூட்டியக்கம்’ என்ற பெயரில் அனைத்து அமைப்பினரும் இணைந்து வருகிற 28-ஆம் தேதி திருச்சியில் ஆா்ப்பாட்டம் நடத்துவது என தீா்மானிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com