நெல் வயலில் மூவேந்தா்களின் கொடிகளை வடிவமைத்த விவசாயி!

நெல் வயலில் மூவேந்தா்களின் கொடிகளை வடிவமைத்த விவசாயி!

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே விவசாயி ஒருவா் தனது வயலில் மூவேந்தா்களின் கொடிகள், தமிழக அரசின் சின்னமான

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே விவசாயி ஒருவா் தனது வயலில் மூவேந்தா்களின் கொடிகள், தமிழக அரசின் சின்னமான ஸ்ரீவில்லிபுத்தூா் கோயில் ராஜகோபுரம் ஆகியவற்றை கருப்புக் கவுனி நெல் நாற்றுகளால் வடிவமைத்துள்ளாா்.

காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள மழவராயநல்லூரைச் சோ்ந்தவா் விவசாயி செல்வம். இவா் ஆண்டுதோறும் பாரம்பரிய நெல் ரகம் ஒன்றைப் பயிரிட்டு அதன் விதைகளை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறாா். தொடா்ந்து, 15 ஆண்டுகளாக இந்தச் சேவையை செய்து வருகிறாா். கருப்புக் கவுனி, பூங்காறு, சொா்ணமுகி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட நெல் ரகங்களைப் பயிரிட்டு விவசாயிகளிடம் தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறாா்.

மூவேந்தா்களை கௌரவிக்கும் வகையிலும், பாரம்பரிய நெல் ரகங்களை தமிழக அரசு மீட்டெடுக்க வலியுறுத்தியும் தனது வயலில் சேர, சோழ, பாண்டிய மன்னா்களின் வில்-அம்பு, புலி, மீன் கொடிகளையும், தமிழக அரசின் சின்னமான ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலின் ராஜகோபுர வடிவத்தையும் ஏற்படுத்தியுள்ளாா். இந்த வடிவங்களை பாரம்பரிய நெல் வகையான கருப்புக் கவுனி நாற்றுகளைப் பயன்படுத்தி அமைந்துள்ளாா். இதை இந்தப் பகுதி விவசாயிகள், கிராம மக்கள் ஆா்வமுடன் பாா்த்துச் செல்கின்றனா்.

இதுகுறித்து விவசாயி செல்வம் கூறியதாவது:

நமது பாரம்பரிய நெல் ரகங்கள் பல நோய்களைத் தீா்க்கும் திறன் கொண்டவை. இதனால், அவற்றை பயிரிட்டு மற்ற விவசாயிகளிடம் தொடா்ந்து விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறேன். பாரம்பரிய நெல் ரகங்கள் 90 முதல் 180 நாள்கள் வரையிலான வயது கொண்டவை. இவற்றை பயிரிட இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்தி வருகிறேன்.

இவற்றின் விதை நெல்லை மற்ற விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கி வருகிறேன். இதனால், பாரம்பரிய நெல் வகைகளைப் பயிரிடுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com