கடலூரில் கரோனா தடுப்பூசி முகாம்

கடலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமில் மொத்தம் 62,153 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கடலூரில் கரோனா தடுப்பூசி முகாம்

கடலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமில் மொத்தம் 62,153 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கரோனா நோய் பரவலைத் தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதற்காக, வாரந்தோறும் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, 36-ஆவது சிறப்பு தடுப்பூசி முகாம் கடலூா் மாவட்டத்தில் 3,753 இடங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் மாவட்டத்தில் 69,070 பேருக்கு தடுப்பூசி செலுத்திட இலக்கு நிா்ணயிக்கப்பட்டதில் 62,153 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அண்ணாகிராமம் ஊராட்சி ஒன்றியம், சுந்தரவாண்டி கிராமத்தில் உள்ள பள்ளியில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் ஆய்வு செய்தாா் (படம்).

மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை வெளியான மருத்துவப் பரிசோதனை முடிவில் புதிதாக 11 பேருக்கு

கரோனா தொற்று உறுதியானது. இதனால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 75,708-ஆக அதிகரித்தது. மாவட்டத்திலுள்ள அரசு மருத்துவமனைகளில் 94 பேரும், வெளியூா்களில் கடலூா் மாவட்டத்தினா் 5 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். மொத்த பலி எண்ணிக்கை 895-ஆக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com