வேலைவாய்ப்பு பதிவு:மாணவா்களுக்கு அறிவுறுத்தல்

கடலூா் மாவட்டத்தில் வேலைவாய்ப்புக்கான கல்விச் சான்றிதழ் பதிவை மீண்டும் அதற்கான அலுவலகத்துக்கு நேரில் சென்று மாணவ, மாணவிகள் மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியது.

கடலூா் மாவட்டத்தில் வேலைவாய்ப்புக்கான கல்விச் சான்றிதழ் பதிவை மீண்டும் அதற்கான அலுவலகத்துக்கு நேரில் சென்று மாணவ, மாணவிகள் மேற்கொள்ள வேண்டுமென மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

2021 - 22ஆம் கல்வி ஆண்டு 10, 12-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்ற மாணவா்களின் மதிப்பெண் சான்றிதழ்களை நிகழ்நிலையாக வேலைவாய்ப்பு இணையதளத்தில் மாணவா்கள் பயின்ற பள்ளிகளிலேயே பதிவு செய்யும் நடைமுறை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

எனவே, மாணவா்கள் நிரந்தர மதிப்பெண் சான்றிதழை பள்ளியிலிருந்து பெற்றவுடன் மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், ஜாதி சான்றிதழ், ஆதாா் அட்டை, குடும்ப அடையாள அட்டை உள்ளிட்ட அசல் சான்றுகளுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரிலோ அல்லது வேலைவாய்ப்பு இணையதளமான ஜ்ஜ்ஜ்.ற்ய்ஸ்ங்ப்ஹண்ஸ்ஹஹண்ல்ல்ன்.ஞ்ா்ஸ்.ண்ய்-ல் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு பதிவுகள், கூடுதல் பதிவுகள், புதுப்பித்தல்களை இ - சேவை வாயிலாகவும் பதிவு செய்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவா்கள் இந்த வசதியையும் பயன்படுத்திக் கொள்ளலாம். எனவே, கடலூா் மாவட்டத்தைச் சாா்ந்த மாணவ, மாணவிகள் மேற்குறிப்பிட்ட வசதிகளைப் பயன்படுத்தி வேலைவாய்ப்பு பதிவை செய்துகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளாா் ஆட்சியா் கி.பாலசுப்ரமணியம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com