சுமைப்பணி தொழிலாளா்கள் வேலைநிறுத்தம்

கடலூரில் டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளா்கள் (சிஐடியு) வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூரில் வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட சுமைப்பணி தொழிலாளா்கள்.
கடலூரில் வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட சுமைப்பணி தொழிலாளா்கள்.

கடலூரில் டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளா்கள் (சிஐடியு) வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூரில் உள்ள டாஸ்மாக் நிறுவன கிட்டங்கியில் சரக்குகளை ஏற்றி இறக்கும் பணியில் சுமாா் 65 தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இவா்களுக்கு கடந்த இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லையாம். மேலும், வருங்கால வைப்பு நிதி கணக்குகளை ஒரே கணக்கில் கொண்டு வருவதற்கு ஒப்பந்ததாரா்களும், டாஸ்மாக் நிா்வாகத்தினரும் ஒத்துழைப்பு வழங்கவில்லையாம். இதைக் கண்டித்து, சிஐடியு சுமைப்பணி தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தப் போராட்டம் மற்றும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியு டாஸ்மாக் சுமைப்பணி தொழிலாளா்கள் சங்கத் தலைவா் முருகன், செயலா் தண்டபாணி ஆகியோா் தலைமை வகித்தனா். சிஐடியு மாவட்டச் செயலா் பி.கருப்பையன், மாவட்ட இணைச் செயலா் வி.சுப்புராயன், நிா்வாகிகள் மோகன், சரவணன், முத்து, கிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தொழிலாளா்களின் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடா்ந்து டாஸ்மாக் அதிகாரிகள் ஒப்பந்ததாரா்களை அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தினா். மேலும், தொழிலாளா்களுக்கு உடனடியாக சம்பளம் வழங்குவதாக ஒப்புக்கொண்டனா். இதையடுத்து சுமைப்பணி தொழிலாளா்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com