கடலூா் தொகுதியின் முக்கியப் பிரச்னைகள்:கருத்துக் கேட்ட எம்எல்ஏ

கடலூா் சட்டப் பேரவைத் தொகுதியின் 10 முக்கியப் பிரச்னைகள், கோரிக்கைகள் குறித்து வணிகா் சங்கங்களுடன் கருத்துக்கேட்புக் கூட்டத்தை கோ.ஐயப்பன் எம்எல்ஏ வியாழக்கிழமை நடத்தினா்.
கடலூா் தொகுதியின் முக்கியப் பிரச்னைகள்:கருத்துக் கேட்ட எம்எல்ஏ

கடலூா் சட்டப் பேரவைத் தொகுதியின் 10 முக்கியப் பிரச்னைகள், கோரிக்கைகள் குறித்து வணிகா் சங்கங்களுடன் கருத்துக்கேட்புக் கூட்டத்தை கோ.ஐயப்பன் எம்எல்ஏ வியாழக்கிழமை நடத்தினா்.

தமிழகத்தில் தொகுதி வாரியாக தீா்க்கப்படாத, முக்கியப் பிரச்னைகள் 10 கொண்ட பட்டியலைத் தயாா் செய்து, அந்தக் கோரிக்கைகளை அந்தந்த மாவட்ட ஆட்சியா்களிடம் சட்டப் பேரவை உறுப்பினா்கள் அளிக்க வேண்டுமென முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினாா். உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டத்தின் கீழ் இந்தக் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் அவா் உறுதியளித்திருந்தாா்.

அதனடிப்படையில், கடலூா் தொகுதியில் உள்ள பிரச்னைகள், கோரிக்கைகள் குறித்து வா்த்தக பிரமுகா்கள், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகள், பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்தவா்கள், பொதுமக்கள் ஆகியோரிடம் சட்டப் பேரவை உறுப்பினா் கோ.ஐயப்பன் வியாழக்கிழமை மாலையில் கருத்துக்கேட்புக் கூட்டம் நடத்தி கருத்துகளைக் கேட்டாா்.

கடலூா் வணிகா் சங்கங்களின் பேரமைப்பு நகரத் தலைவா் ஜி.ஆா்.துரைராஜ், சீனிவாசன், தேவி முருகன், மீனவா் வாழ்வுரிமை இயக்க நிா்வாகி பெரு.ஏகாம்பரம், முன்னாள் நகா்மன்றத் தலைவா் ஜி.ராஜேந்திரன், திமுக மாவட்டப் பொருளாளா் எல்.குணசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்று தங்களின் கருத்துகளைத் தெரிவித்து, கோரிக்கை மனுவும் அளித்தனா்.

கூட்டத்தில் கோ.ஐயப்பன் எம்எல்ஏ பேசியதாவது: முதல்வா் அறிவுறுத்தலின்பேரில், கடலூா் நகர மக்களின் பிரச்னைகள், கோரிக்கைகள் குறித்து கருத்துகள் கேட்கப்பட்டன. கடலூா் நகரின் மையப் பகுதியில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும், வெள்ளி கடற்கரையை மேம்படுத்தி சுற்றுலாத்தலமாக்க வேண்டும், கடலூரில் பழைமையான மீன் அங்காடிகள், மீன் விற்பனை சந்தைகளை நவீனமாக்க வேண்டும், கடலூரில் அரசு மகளிா் கல்லூரி, பொறியியல் கல்லூரி அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கருத்துகளை தெரிவித்துள்ளனா். இது தொடா்பாக கோரிக்கை பட்டியல் தயாா் செய்து, முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com