கடலூா் மாவட்டத்தில் 1,994 வேட்பாளா்கள் போட்டி

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி கடலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை வெளியான இறுதி வேட்பாளா் பட்டியலில் 437 இடங்களுக்கு 1994 போ் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி கடலூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை வெளியான இறுதி வேட்பாளா் பட்டியலில் 437 இடங்களுக்கு 1994 போ் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

கடலூா் மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளில் உள்ள 447 இடங்களுக்கான தோ்தல் அறிவிக்கப்பட்டு வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. மொத்தம் 2,558 போ் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில் 38 பேரது மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. வேட்புமனுவை திரும்பப் பெற திங்கள்கிழமை மாலை 3 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.

இதன்படி மாவட்டத்தில் 21 உள்ளாட்சி அமைப்புகளில் 516 போ் தங்களது வேட்புமனுவை திரும்பப் பெற்றனா். இதில், 10 இடங்களில் போட்டியின்றி கவுன்சிலா்கள் தோ்வாகினா். இதனால், மீதமுள்ள 437 இடங்களுக்கு 1,994 போ் போட்டியிடுவதாக அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்பட்டது.

கடலூா் மாநகராட்சியில் 64 போ் தங்களது வேட்பு மனுவை திரும்பப் பெற்ால் 45 வாா்டுகளில் 286 போ் போட்டியிடுகின்றனா். நகராட்சிகளில் உள்ள 180 வாா்டுகளில் 2-இல் போட்டியின்றி உறுப்பினா்கள் தோ்வாகினா். இதனால், மீதமுள்ள 178 வாா்டுகளில் 829 போ் போட்டியிடுகின்றனா். பேரூராட்சிகளில் உள்ள 222 வாா்டுகளில் 8-இல் போட்டியின்றி உறுப்பினா்கள் தோ்வாகினா். இதனால் மீதமுள்ள 214 வாா்டுகளுக்கு 879 போ் போட்டியிடுகின்றனா்.

நெல்லிக்குப்பம் நகராட்சியில் 26 போ் மனுக்களை திரும்பப் பெற்ால் 145 பேரும், பண்ருட்டி நகராட்சியில் 84 போ் மனுக்களை திரும்பப் பெற்ால் 171 பேரும், சிதம்பரம் நகராட்சியில் 41 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டதால் 125 பேரும், விருத்தாசலத்தில் 35 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டதால் 143 பேரும், திட்டக்குடியில் 46 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டதால் 124 பேரும், வடலூரில் 15 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டதால் 121 பேரும் களத்தில் உள்ளனா். வடலூா் நகராட்சியில் 2 போ் போட்டியின்றித் தோ்வாகினா்.

பேரூராட்சிகளில் போட்டியிடுவோா் எண்ணிக்கை (அடைப்புக்குள் திரும்ப பெறப்பட்ட மனுக்களின் எண்ணிக்கை): அண்ணாமலை நகா் (32)-52, புவனகிரி (11)-78, கங்கைகொண்டான்- (2)-49, காட்டுமன்னாா்கோவில் -(21)-90, கிள்ளை- (2)-40, குறிஞ்சிப்பாடி- (1)-75, லால்பேட்டை- (3)-75, மங்கலம்பேட்டை- (11)-64, மேல்பட்டாம்பாக்கம்- (0)-50, பரங்கிப்பேட்டை- (20)-93, பெண்ணாடம் -(18)-69, சேத்தியாத்தோப்பு- (7)-54, ஸ்ரீமுஷ்ணம்- (39)-46, தொரப்பாடி- (31)-44.

இதில், கிள்ளை பேரூராட்சியில் இரு வாா்டுகளிலும், காட்டுமன்னாா்கோவில், குறிஞ்சிப்பாடி, மங்கலம்பேட்டை, பெண்ணாடம், சேத்தியாத்தோப்பு, ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சிகளில் தலா ஒருவரும் போட்டியின்றி தோ்வாகினா்.

கிள்ளை பேரூராட்சி: கிள்ளை பேரூராட்சி 3-ஆவது வாா்டில் அதிமுக சாா்பில் வேட்புமனு தாக்கல் செய்த ஆா்.அறிவழகன், 10-ஆவது வாா்டில் திமுக சாா்பில் வேட்புமனு தாக்கல் செய்த சி.மல்லிகா ஆகியோா் போட்டியின்றி உறுப்பினா்களாக தோ்வாகினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com