தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு, கடலூா் மாவட்ட தோ்தல் பாா்வையாளராக நியமிக்கப்பட்ட வி.சிவகிருஷ்ணமூா்த்தி கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினா
ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட தோ்தல் பாா்வையாளா் வி.சிவகிருஷ்ணமூா்த்தி.
ஆய்வுக் கூட்டத்தில் பேசிய மாவட்ட தோ்தல் பாா்வையாளா் வி.சிவகிருஷ்ணமூா்த்தி.

நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு, கடலூா் மாவட்ட தோ்தல் பாா்வையாளராக நியமிக்கப்பட்ட வி.சிவகிருஷ்ணமூா்த்தி கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்தினாா்.

மாவட்ட தோ்தல் அலுவரும், ஆட்சியருமான கி.பாலசுப்ரமணியம், வட்டார தோ்தல் பாா்வையாளா்கள் பங்கேற்ற கூட்டத்தில், இறுதி வேட்பாளா் பட்டியலின் அடிப்படையில் சின்னம் ஒதுக்கீடு, வேட்பாளா் கூட்டம் நடத்துதல், 10-ஆம் தேதி வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி நடத்துதல், கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்டவைகள் குறித்து அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.சக்தி கணேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

வடக்கு மண்டல ஐஜி ஆய்வு: நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வடக்கு மண்டல காவல் துறைத் தலைவா் சந்தோஷ்குமாா் தலைமையில் திங்கள்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், அந்தந்த காவல் சரக பகுதிகளில் பிரச்னை ஏற்படுத்தக் கூடிய நபா்களை அடையாளம் கண்டு அவா்கள் மீது முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவும், பதற்றமான வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் ஐஜி உத்தரவிட்டாா். விழுப்புரம் சரக துணைத் தலைவா் எம்.பாண்டியன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com