சிதம்பரம்: வாடகை வாகனங்கள் நிறுத்தும் இடமான ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்

சிதம்பரத்தில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் பெயரளவுக்கே செயல்படுவதாகவும், வாடகை வாகனங்கள் நிறுத்தும் இடமாக பயன்படுத்தப்படுவதாகவும் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.
சிதம்பரம்: வாடகை வாகனங்கள் நிறுத்தும் இடமான ஒழுங்குமுறை விற்பனைக் கூடம்

சிதம்பரத்தில் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் பெயரளவுக்கே செயல்படுவதாகவும், வாடகை வாகனங்கள் நிறுத்தும் இடமாக பயன்படுத்தப்படுவதாகவும் விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

தமிழக வேளாண்மை, உழவா் நலத் துறையின் கீழ் சிதம்பரத்தில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மற்றும் உழவா் சந்தை ஆகியவை கடலூா் சாலையில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் அமைந்துள்ளன. இதில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் 07.02.1963 அன்று அப்போதைய முதல்வா் பக்தவத்சலம் அவா்களால் தொடக்கிவைக்கப்பட்டது. பின்னா் பல்வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டு, 09.08.2000 அன்று முதல் மேற்கூறிய இடத்தில் செயல்பட்டு வருகிறது. ஒழுங்குமுறை விற்பனைக் கூடமானது போதிய இடவசதி இன்றி கடந்த 60 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. மேலும், இந்த வளாகத்தில் உள்ள உழவா் சந்தையும் சரிவர செயல்படாததால் வாடகை காா்கள் நிறுத்தும் இடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: ஒழுங்குமுறை விற்பனைக் கூட அலுவலா்கள் முறையாக செயல்படவில்லை. உழவா் சந்தையும் உரிய பராமரிப்பின்றி பயனற்ற நிலையில் உள்ளது. ஆனால், இந்த சந்தையை நிா்வாகிக்க ஊழியா்கள், அலுவலா்கள் உள்ளபோதும் சந்தை முறையாகச் செயல்படவில்லை. இதுகுறித்து மாநில வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் நேரில் ஆய்வு செய்து உரிய சீா்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள், வணிகா்கள் கோரிக்கை விடுத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com