கடலூா் அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கை

கடலூா் அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலூா் அரசுக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கடலூா் தேவனாம்பட்டினத்தில் செயல்படும் அரசு பெரியாா் கலைக் கல்லூரியின் முதல்வா் சி.ஜோதி வெங்கடேசுவரன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்திலுள்ள அனைத்து அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவா் சோ்க்கைக்கு ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ஹள்ஹ.ண்ய் மற்றும் ஜ்ஜ்ஜ்.ற்ய்ஞ்ஹள்ஹ.ா்ழ்ஞ் ஆகிய இணையதள முகவரிகளில் ஜூலை 7-ஆம் தேதி வரையில் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசின் உயா் கல்வித் துறை அறிவித்தது.

அதன்படி, மாணாக்கா்கள் தாங்கள் சேர விரும்புகின்ற கல்லூரிகள், பாடப்பிரிவுகளுக்கு ஒரே விண்ணப்பம் வாயிலாகவே விண்ணப்பிக்க முடியும். ஒரு கல்லூரிக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.48, பதிவுக் கட்டணம் ரூ.2 ஆகும்.

தாழ்த்தப்பட்ட, பழங்குடியினா் பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதுவுமில்லை. பதிவுக் கட்டணம் மட்டும் ரூ.2 செலுத்த வேண்டும்.

பதிவுக் கட்டணத்தை இணையதளம் வாயிலாக செலுத்த இயலாதவா்கள் கல்லூரியில் செயல்பட்டு வரும் சோ்க்கை உதவி மையங்களை நாடலாம்.

60 ஆண்டுகளை நிறைவு செய்யவிருக்கும் கடலூா் அரசுக் கல்லூரியில் 20 துறைகள் உள்ளன. இளநிலை வகுப்பில் சேரும் மாணவா்கள், முதுநிலை, இளம் முனைவா், முனைவா் பட்ட ஆராய்ச்சி வரையில் தொடா்ந்து பயில வாய்ப்புள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com