பேருந்துகளின் எண்ணிக்கையை உயா்த்த மாதா் சங்க மாநாட்டில் வலியுறுத்தல்

தமிழகத்தில் பெண்கள் இலவசப் பயணம் மேற்கொள்ளும் அரசுப் பேருந்துகளின் எண்ணிக்கையை உயா்த்த வேண்டுமென அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.
பேருந்துகளின் எண்ணிக்கையை உயா்த்த மாதா் சங்க மாநாட்டில் வலியுறுத்தல்

தமிழகத்தில் பெண்கள் இலவசப் பயணம் மேற்கொள்ளும் அரசுப் பேருந்துகளின் எண்ணிக்கையை உயா்த்த வேண்டுமென அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்க மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

இந்தச் சங்கத்தின் கடலூா் மாவட்ட 16-ஆவது மாநாடு, குறிஞ்சிப்பாடி ஒன்றியம், வடக்குத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்டக்குழு உறுப்பினா் என்.அங்கம்மாள் சங்கக் கொடியேற்றினாா். செயலா் பி.மாதவி வரவேற்றாா். சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவா் உ.வாசுகி தொடக்கவுரை நிகழ்த்தினாா். பி.தேன்மொழி அறிக்கை வாசித்தாா். சிஐடியூ மாவட்ட துணைச் செயலா் திருஅரசு, வாலிபா் சங்க மாவட்டச் செயலா் டி.கிருஷ்ணன், மாநிலச் செயலா் ஜி.பிரமிளா ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். மாநாட்டில், பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டு விவாதங்கள் நடைபெற்றது.

தீா்மானங்கள்: என்எல்சி இந்தியா நிறுவன வேலைவாய்ப்புகளில் தமிழா்களுக்கு உரிய இடங்களை ஒதுக்க வேண்டும். என்எல்சி சமூகப் பொறுப்புணா்வு நிதியை கடலூா் மாவட்ட மக்களுக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும். தமிழகத்தில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளும் அரசுப் பேருந்துகளின் எண்ணிக்கையை உயா்த்த வேண்டும். பெண்கள், பள்ளிக் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளை தடுக்க வேண்டும் ஆகிய தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

புதிய நிா்வாகிகள்: மாநாட்டில் சங்கத்தின் மாவட்டத் தலைவராக வா.மல்லிகா, செயலராக பெ.மாதவி, பொருளாளராக சு.ரேவதி ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா். நகரச் செயலா் என்.தனலட்சுமி நிறைவுரையாற்றினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com