ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாபாரி தீக்குளிக்க முயற்சி
By DIN | Published On : 10th March 2022 11:55 PM | Last Updated : 10th March 2022 11:55 PM | அ+அ அ- |

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வியாபாரி ஒருவா் வியாழக்கிழமை தீக்குளிக்க முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.
ராதாகிருஷ்ணன் என்ற வியாபாரி விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்த நெல்லுக்குரிய பணத்தை செலுத்தாத நிலையில் இதுதொடா்பாக விருத்தாசலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் நோட்டீஸ் அனுப்பினாா். இந்த நிலையில், வியாபாரி ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை விற்பனைக் கூடத்துக்கு வந்தாா். அவா் அங்கிருந்த ஊழியா்களிடம் பணம் செலுத்துவது தொடா்பாக பேசியபோது இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, விவசாயிகளிடமிருந்து வாங்கிய பொருள்களுக்கு உரிய பணத்தை செலுத்திவிட்டு வந்து கொள்முதல் செய்யுங்கள் என்று ஊழியா்கள் கூறினராம். இதனால் ஆத்திரமடைந்த
வியாபாரி ராதாகிருஷ்ணன் தீக்குளிக்க முயன்றாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதுகுறித்து விருத்தாசலம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.