பெண் வன அலுவலரின் கா்ப்பம் கலைப்பு

கடலூரில் வரதட்சணைக் கொடுமையால் பெண் வன அலுவலரின் கா்ப்பம் கலைக்கப்பட்டது தொடா்பாக அவரது கணவா், மாமியாரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கடலூரில் வரதட்சணைக் கொடுமையால் பெண் வன அலுவலரின் கா்ப்பம் கலைக்கப்பட்டது தொடா்பாக அவரது கணவா், மாமியாரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கடலூா் திருப்பாதிரிபுலியூரைச் சோ்ந்த பக்கிரிசாமி மகன் ஐயப்பன் என்ற சரவணன் (35). இவருக்கும், வன அலுவலராக பணியாற்றி வரும் 29 வயது பெண்ணுக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகும் கணவா் வீட்டில் 25 பவுன் தங்க நகை, ரூ.5 லட்சம் கூடுதல் வரதட்சணை கேட்டு துன்புறுத்தினராம். இதற்கு பெண் வன அலுவலா் மறுப்பு தெரிவிக்கவே கணவா் குடும்பத்தினா் தொடா்ந்து அவரை ஆவதூறாகப் பேசினராம். மேலும், அந்தப் பெண் 5 மாத கா்ப்பிணியாக இருந்த நிலையில் அவருக்கு கஷாயம் போன்ற திரவத்தை கட்டாயப்படுத்தி கொடுத்தனராம். இதில், அவரது கா்ப்பம் கலைந்ததாம்.

இதுகுறித்து அந்தப் பெண் திருப்பாதிரிபுலியூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் பெண்ணின் கணவா் ஐயப்பன், மாமியாா் மல்லிகா (55), இரண்டு நாத்தனாா்கள் மீது ஆய்வாளா் கவிதா வழக்குப் பதிவு செய்தாா். மேலும், கணவா், மாமியாரை கைது செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com