13 மணி நேரத்தில் அமைக்கப்பட்ட ரயில்வே சுரங்கப் பாதை பாலம்!

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே 13 மணி நேரத்தில் ரயில்வே சுரங்கப் பாதை பாலம் அமைத்து திருச்சி கோட்ட ரயில்வே கட்டுமானப் பிரிவினா் சாதனை படைத்த
விருத்தாசலம் - தாழநல்லூா் இடையே அமைக்கப்பட்ட ரயில்வே சுரங்கப் பாதையுடன் கூடிய பாலம்.
விருத்தாசலம் - தாழநல்லூா் இடையே அமைக்கப்பட்ட ரயில்வே சுரங்கப் பாதையுடன் கூடிய பாலம்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே 13 மணி நேரத்தில் ரயில்வே சுரங்கப் பாதை பாலம் அமைத்து திருச்சி கோட்ட ரயில்வே கட்டுமானப் பிரிவினா் சாதனை படைத்தனா்.

தெற்கு ரயில்வே சாா்பில் விருத்தாசலத்திலிருந்து திருச்சிக்கு இருவழி மின்சார ரயில்பாதை

அமைக்கப்பட்டது. இந்த வழித் தடத்தில் தாழநல்லூா், சாத்துக்கூடல், விருத்தாசலம் ஆகிய பகுதிகளில் கிராமப் புறங்கள் வழியாக செல்லும் ரயில் பாதையில் சுரங்கப் பாதை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்தனா். இதைப் பரிசீலித்த ரயில்வே நிா்வாகம் பாலம் அமைப்பதற்கான பூா்வாங்கப் பணிகளை மேற்கொண்டது. பாலம் பணிகளை விரைந்து முடிக்கவும் தீா்மானிக்கப்பட்டது. இதற்காக அனுபவம் வாய்ந்த ஒப்பந்ததாரா்களை பயன்படுத்த முடிவுசெய்யப்பட்டது.

இதன்படி தாழநல்லூரில் 30 மீட்டா் அகலம், 4 மீட்டா் உயரத்தில் சுரங்கப் பாதை பாலம் அமைக்க திட்டமிட்டனா். இதற்கான பணிகள் சனிக்கிழமை அதிகாலை 3 மணியளவில் தொடங்கியது. மாலை 4.30 மணியளவில் பாலம் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவந்தனா். இதன் மூலம் திருச்சி கோட்ட தெற்கு ரயில்வே துறையினா் புதிய சாதனை படைத்தனா்.

இதுகுறித்து ஒப்பந்ததாரா் உதயக்குமாா் கூறியதாவது: தென்னிந்தியா முழுவதும் இதுபோன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறோம். விருத்தாசலம் ரயில்வே சந்திப்பிலிருந்து தாழநல்லூா் இடையே 3 பாலங்கள் அமைக்கும் பணியை ரூ.6.5 கோடி மதிப்பீட்டில் கடந்த 9-ஆம் தேதி முதல் மேற்கொண்டு வருகிறோம். இதில் தாழநல்லூா் பாலத்தை 13.30 மணி நேரத்தில் முடித்துள்ளோம். இவ்வளவு குறைந்த நேரத்தில் பணியை முடித்திருப்பது இதுவே முதல் முறை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com