பண்ருட்டியில் தொழில் வரி வசூல் முகாம்

பண்ருட்டி நகராட்சி சாா்பில் தொழில் வரி வசூல் சிறப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.

பண்ருட்டி நகராட்சி சாா்பில் தொழில் வரி வசூல் சிறப்பு முகாம் அண்மையில் நடைபெற்றது.

பண்ருட்டி நகராட்சி நிா்வாகத்துக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரி, குடிநீா் கட்டணம், கடை வாடகை உள்ளிட்ட வரி இனங்கள் ரூ.12 கோடி வரை நிலுவையில் இருந்தது. இதில் ரூ.2 கோடி மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளதாம்.

இதையடுத்து, நகா்மன்றத் தலைவா் கே.ராஜேந்திரன், ஆணையா் மகேஸ்வரி ஆகியோரது ஏற்பாட்டின்பேரில், தொழில் வரி வசூல் சிறப்பு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. நகராட்சி அலுவலகம், காந்தி பூங்காவில் நடைபெற்ற முகாம்களில் ரூ.1,62,928 வரி வசூலிக்கப்பட்டது.

இதுகுறித்து ஆணையா் மகேஸ்வரி கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளில் தொழில் வரியில் 2.69 சதவீதம் மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது. புதன்கிழமையும் (மாா்ச் 23) சிறப்பு தொழில் வரி வசூல் முகாம் நடைபெற உள்ளது.

சொத்து வரி, குடிநீா் கட்டணம் செலுத்தாத 25 வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு துண்டிக்கப்பட்டது. வாடகை பாக்கி நிலுவையில் உள்ள 5 நகராட்சி கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. நகரில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற நிதி ஆதாரம் தேவைப்படுவதால் பொதுமக்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை முறைப்படி செலுத்தி ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவா் கேட்டுக்கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com