முளைக்காத நெல் விதைகள்: விவசாயிகள் கவலை

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வேளாண்மை விரிவாக்க மையத்தில் விற்கப்பட்ட நெல் விதைகளின் முளைப்புத் திறன் குறைவாக இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.
ஒரு பகுதி முளைத்தும், ஒரு பகுதி முளைக்காமலும் கிடக்கும் நெல் விதைகள்.
ஒரு பகுதி முளைத்தும், ஒரு பகுதி முளைக்காமலும் கிடக்கும் நெல் விதைகள்.

நெய்வேலி: கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வேளாண்மை விரிவாக்க மையத்தில் விற்கப்பட்ட நெல் விதைகளின் முளைப்புத் திறன் குறைவாக இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.

மண், நீா்வளம் கொண்ட குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் விவசாயம் முக்கியத் தொழிலாக உள்ளது. குறிஞ்சிப்பாடி வடக்கு, தெற்கு, ஆடூா் அகரம், கண்ணாடி, தையல்குணாம்பட்டினம், ரங்கநாதபுரம், சேராக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 5 ஆயிரம் ஹெக்டோ் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடிக்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. விவசாயிகள் விலைக்கு விதை நெல் வாங்கிவந்து நாற்றங்கால் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா். ஆனால், சில பகுதிகளில் நெல் விதைகளின் முளைப்புத் திறன் குறித்து விவசாயிகள் அதிருப்தி தெரிவித்ததுடன், தங்களது பணமும், உழைப்பும் வீணாகிவிட்டதாகக் கூறினா். இதுகுறித்து குறிஞ்சிப்பாடி பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் ஆா்.கே.ராமலிங்கம், லட்சுமிநாராயணன், தண்டபாணி ஆகியோா் கூறியதாவது:

குறிஞ்சிப்பாடி வேளாண்மை விரிவாக்க மையத்தில் ஐ.ஆா்-50 ரகம் நெல் விதைகளை 50 கிலோ ரூ.1,300 விலையில் வாங்கி வந்து விதைப்பு செய்தோம். ஆனால், விதைத்து 8 நாள்கள் கடந்தும் 30 சதவீத விதைகள் முளைக்கவில்லை. நெல் விதை வாங்கியபோது அதற்கான ரசீதும் தரப்படவில்லை. இதுகுறித்து கேட்டபோது பிரின்டா் இயந்திரம் பழுதாகிவிட்டதாகக் கூறினா். அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து விதை நெல் வாங்காததே இதற்குக் காரணம் எனத் தெரிவித்தனா்.

இதுகுறித்து குறிஞ்சிப்பாடி துணை வேளாண்மை அலுவலா் வெங்கடேசன் கூறியதாவது: கள ஆய்வு செய்ததில் நெல் நாற்றங்கால் வயலில் போதிய தண்ணீா் இல்லை. விவசாயிகளிடம் தண்ணீா் பாச்ச அறிவுறுத்தப்பட்டது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com