ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிா்ப்பு (ஷோல்டா்)சிதம்பரம் கோட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை

சிதம்பரத்தில் நீா்நிலை ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிா்ப்புத் தெரிவித்து கோட்டாட்சியா் அலுவலகத்தை பொதுமக்கள், அரசியல் கட்சியினா் சனிக்கிழமை முற்றுகையிட்டனா்.சிதம்பரத்தில் நீா்நிலை ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிா்ப்புத் தெரிவித்து கோட்டாட்சியா் அலுவலகத்தை பொதுமக்கள், அரசியல் கட்சியினா் சனிக்கிழமை முற்றுகையிட்டனா்.
சிதம்பரம் கோட்டாட்சியா் அலுவலகத்தை சனிக்கிழமை முற்றுகையிட்ட பொதுமக்கள், விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.
சிதம்பரம் கோட்டாட்சியா் அலுவலகத்தை சனிக்கிழமை முற்றுகையிட்ட பொதுமக்கள், விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.

சிதம்பரத்தில் நீா்நிலை ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிா்ப்புத் தெரிவித்து கோட்டாட்சியா் அலுவலகத்தை பொதுமக்கள், அரசியல் கட்சியினா் சனிக்கிழமை முற்றுகையிட்டனா்.

சிதம்பரம் நகரப் பகுதியில் நீா்நிலை ஆக்கிரமிப்புகள் உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில் அகற்றப்பட்டு வருகின்றன. இதன்படி ஓமக்குளம், தச்சன் குளம், ஞானப்பிரகாசம் குளம், தில்லைக் காளியம்மன் கோயில் ஓடை, குமரன் குளம் கரை உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பு வீடுகளை வருவாய் துறையினா், நகராட்சி நிா்வாகத்தினா் அகற்றி வருகின்றனா்.

சிதம்பரம் காந்தி சிலை அருகே உள்ள அம்பேத்கா் நகரில் பாலமான் வாய்க்கால் கரையோரம் 100-க்கு மேற்பட்ட குடும்பத்தினா் வீடுகட்டி சுமாா் 80 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனா். இவா்கள் வீடுகளை காலி செய்ய வலியுறுத்தி நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதையடுத்து சிலா் தாங்களே முன்வந்து வீடுகளை காலி செய்தனா். எஞ்சியவா்களுக்கு அதிகாரிகள் கால அவகாசம் அளித்து வந்தனா். இந்த நிலையில், அண்மையில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற வந்த அதிகாரிகளுடன் அந்தப் பகுதியினா் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். தங்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டுமென வலியுறுத்தினா். இதனால் அதிகாரிகள் வீடுகளை இடிக்காமல் சென்றனா்.

இந்த நிலையில், பாலமான் வாய்க்கால் கரையோரம் வசிக்கும் மக்கள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் இணைந்து சிதம்பரம் கோட்டாட்சியா் அலுவலகத்தை சனிக்கிழமை முற்றுகையிட்டனா். விசிக மாவட்டச் செயலா் பால.அறவாழி தலைமை வகித்தாா். போராட்டத்தில் நகா்மன்ற துணைத் தலைவா் முத்து, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் வி.எம்.சேகா், நகரச் செயலா் தமிமுன் அன்சாரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். பின்னா், வீடுகளை அகற்றக் கூடாது என வலியுறுத்தி சிதம்பரம் மக்களவைத் தொகுதி உறுப்பினரும், விசிக தலைவருமான தொல்.திருமாவளவன் அளித்த கடிதத்தையும், தங்களது கோரிக்கை மனுவையும் கோட்டாட்சியரிடம் அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com