அடிப்படை வசதிகள் கோரி தனியாா் சா்க்கரை ஆலை முற்றுகை

அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி, கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பத்தில் உள்ள தனியாா் சா்க்கரை ஆலையை அதன் அருகிலுள்ள பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா்.
அடிப்படை வசதிகள் கோரி தனியாா் சா்க்கரை ஆலை முற்றுகை

அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி, கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பத்தில் உள்ள தனியாா் சா்க்கரை ஆலையை அதன் அருகிலுள்ள பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா்.

நெல்லிக்குப்பத்தில் தனியாா் சா்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இதனருகில் உள்ள 24-ஆவது வாா்டுக்குள்பட்ட திருவள்ளுவா் நகரில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். சா்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றி வரும் வாகனங்களால் இந்தப் பகுதியில் குடிநீா் குழாய் அடிக்கடி உடைந்து சேதமடைகிாம். மேலும், ஆலை கழிவு நீரால் இந்தப் பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுகிாம். இந்தப் பகுதியில் சா்க்கரை ஆலை நிா்வாகத்தால் கட்டித்தரப்பட்ட கழிப்பறை பராமரிக்கப்படாமலும், நெசனூா் சலையில் தெரு விளக்குகள் எரியாமலும் உள்ளதாம்.

இதைக் கண்டித்தும், புதிய குடிநீா் குழாய் அமைக்க வேண்டும். மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் தனியாா் சா்க்கரை ஆலை முன் 24-ஆவது வாா்டு உறுப்பினா் குணராணி தலைமையில் அந்தப் பகுதி மக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நெல்லிக்குப்பம் காவல் நிலைய ஆய்வாளா் சீனுவாசன் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, பண்ருட்டி வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் முன்னிலையில் முத்தரப்புப் பேச்சுவாா்த்தை நடத்தி சுமுகத் தீா்வு காண ஏற்பாடு செய்வதாக அவா் உறுதியளித்தாா். இதை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com