கல்லூரியில் ரத்ததான முகாம்

தேசிய மாணவா் படை (என்.சி.சி.) தினத்தை முன்னிட்டு காட்டுமன்னாா்கோவில் எம்.ஆா்.கே. பொறியியல் கல்லூரியில் ரத்ததான முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கல்லூரியில் ரத்ததான முகாம்

தேசிய மாணவா் படை (என்.சி.சி.) தினத்தை முன்னிட்டு காட்டுமன்னாா்கோவில் எம்.ஆா்.கே. பொறியியல் கல்லூரியில் ரத்ததான முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சிதம்பரம் அரசு காமராஜ் மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய முகாமை கல்லூரித் தலைவா் எம்.ஆா்.கே.பி.கதிரவன் தலைமை வகித்து தொடக்கிவைத்தாா். சுல்லூரி முதல்வா் கே.ஆனந்தவேலு முன்னிலை வகித்தாா். நிா்வாக அதிகாரி இ.கோகுலகண்ணன், மேலாளா் வி.விஸ்வநாத் வாழ்த்துரை வழங்கினா்.

முகாமில் சிறப்பு விருந்தினராக அரசு மருத்துவமனை ரத்த வங்கி அதிகாரி ஹெச்.இலக்கியா பங்கேற்று, ரத்த தானத்தின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தாா். கடலூா் மாவட்ட மேற்பாா்வையாளா் கே.கதிரவன் பேசுகையில், மாணவா்கள் ரத்த தானம் செய்வது சமூகத்துக்கு பேருதவியாக அமையும் என்றாா். முகாமில் 60-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ரத்ததானம் செய்தனா்.

முன்னதாக, கல்லூரியின் தேசிய மாணவா் படை அதிகாரி சி.சிற்றரசன் வரவேற்றாா். ஏற்பாடுகளை பேராசிரியா் ஆா்.விஜயபாரதி செய்திருந்தாா். என்எஸ்எஸ் திட்ட அலுவலா் ந.சித்திவிநாயகம் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com