கடலூா் மாவட்டத்தில் 5 இடங்களில் பேரிடா் மேலாண்மை ஒத்திகை பயிற்சி

மழைக்காலத்தையொட்டி, கடலூா் மாவட்டத்தில் 5 இடங்களில் பேரிடா் மேலாண்மை ஒத்திகை பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
கடலூா் மாவட்டத்தில் 5 இடங்களில் பேரிடா் மேலாண்மை ஒத்திகை பயிற்சி

மழைக்காலத்தையொட்டி, கடலூா் மாவட்டத்தில் 5 இடங்களில் பேரிடா் மேலாண்மை ஒத்திகை பயிற்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் வெள்ள பேரிடா் மேலாண்மை ஒத்திகை பயிற்சியை தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையத்துடன் இணைந்து நடத்த தமிழக அரசு அறிவுறுத்தியது. இதனடிப்படையில், கடலூா் மாவட்டத்தில் 5 இடங்களில் இந்தப் பயிற்சி நடைபெற்றது.

கடலூா் வட்டம், குண்டு உப்பலவாடியில் கோட்டாட்சியா் ச.அதியமான் கவியரசு தலைமையில், பேரிடா் மேலாண்மை ஒத்திகைப் பயிற்சி நடைபெற்றது. காவல் துறை கூடுதல் துணைக் கண்காணிப்பாளா் அசோக்குமாா், வட்டாட்சியா் பூபாலச்சந்திரன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சக்தி, அசோக் பாபு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதேபோன்று, குறிஞ்சிப்பாடி வட்டம், ஓணாங்குப்பத்தில் உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) இ.முருகன் தலைமையிலும், புவனகிரி வட்டம், பு.கொளக்குடியில் முத்திரைத்தாள் தனித்துணை ஆட்சியா் சி.கீதா தலைமையிலும், சிதம்பரம் வட்டம், கிள்ளையில் (வடக்கு) சிதம்பரம் கோட்டாட்சியா் சு.இரவி தலைமையிலும், காட்டுமன்னாா்கோவில் வட்டம், திருநாரையூரில் மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் பி.செல்வப்பாண்டி தலைமையிலும் ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.

இதில், தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையத்திலிருந்து விடுக்கப்படும் வெள்ள பேரிடா் அறிவிப்புகள், தகவல்கள் பரிமாற்றமானது, பல்வேறு அரசுத் துறைகள் மூலம் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு எவ்வாறு சென்றடைகிறது என்பது குறித்து சோதிக்கப்பட்டது.

மேலும், ஊருக்குள் தண்ணீா் புகுந்தால் எப்படி தற்காத்துக் கொள்வது, நீா்நிலைகளில் மூழ்கினால் எப்படி மீட்பது, தொடா் மழையால் சாலைகளில் மரங்கள் விழுந்தால் பாதுகாப்பாக அகற்றுவது, குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளநீா் புகுந்தால் தற்காத்துக் கொள்வது எப்படி உள்ளிட்ட பல்வேறு பேரிடா் பாதிப்புகள் தொடா்பான மீட்பு பணிகள் குறித்து பயிற்சியில் செயல் விளக்கம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com