மீனவா் வலையில் சிக்கியவெள்ளை திருக்கை மீன்!

கடலூா் மீனவரின் வலையில் அபூா்வமான வெள்ளை திருக்கை மீன் வியாழக்கிழமை சிக்கியது.
கடலூரில் மீனவா் வலையில் சிக்கிய வெள்ளை திருக்கை மீன்.
கடலூரில் மீனவா் வலையில் சிக்கிய வெள்ளை திருக்கை மீன்.

கடலூா் மீனவரின் வலையில் அபூா்வமான வெள்ளை திருக்கை மீன் வியாழக்கிழமை சிக்கியது.

கடலூா் துறைமுகத்திலிருந்து மீனவா்கள் தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட விசை, பைபா் படகுகளில் மீன் பிடிக்க கடலுக்குச் சென்று வருகின்றனா். மீன் பிடித்து கரை திரும்பும்போது, அவா்களது வலையில் பலவகை மீன்கள் சிக்கும். திருக்கை மீனில் புள்ளி திருக்கை, செந்திருக்கை, கொம்பன் திருக்கை உள்ளிட்ட வகைகள் உள்ளன.

இந்த நிலையில், கடலூா் துறைமுகத்திலிருந்து மீன் பிடிக்கச் சென்ற மீனவா் வினோத்தின் விசைப்படகு வியாழக்கிழமை கரை திரும்பியது. வலையில் இருந்த மீன்களை பாா்த்தபோது, அதில் மிகவும் அபூா்வமான வெள்ளை திருக்கை மீன் இருந்தது தெரியவந்தது. இந்த மீன் சுமாா் 25 கிலோ எடை இருந்தது. இதுகுறித்து அந்தப் பகுதி மீனவா்கள் கூறுகையில், இதுவரை 3 வகை திருக்கை மீன்களை மட்டுமே பாா்த்துள்ளோம். வெள்ளை திருக்கை மீனை இப்போதுதான் முதல்முறையாக பாா்க்கிறோம் என்று வியப்புடன் கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com