உலக ஈர நில தினம்: பிச்சாவரத்தில் விழிப்புணா்வு

உலக ஈர நிலம் தினத்தையொட்டி சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரத்தில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் அண்மையில் நடைபெற்றன.
கிள்ளையில் வனத்துறை சாா்பில் நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணி.
கிள்ளையில் வனத்துறை சாா்பில் நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணி.

உலக ஈர நிலம் தினத்தையொட்டி சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரத்தில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் அண்மையில் நடைபெற்றன.

ஆண்டுதோறும் பிப்ரவரி 2-ஆம் தேதி உலக ஈர நில தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பிச்சாவரம் வனப் பகுதிக்கு ‘ராம்சா்’ அங்கீகாரம் கிடைத்த நிலையில் நிகழாண்டு நடைபெற்ற உலக ஈர நில தின நிகழ்ச்சியின் தொடக்கமாக படகு இல்லத்தில் உதவி வனப் பாதுகாவலா் பாலசுப்பிரமணியன் தலைமையில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. பிச்சாவரம் வனச்சரக அலுவலா் கமலக்கண்ணன் முன்னிலை வகித்தாா். விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணியில் பல்வேறு பள்ளிகளைச் சோ்ந்த மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா். கிள்ளையில் தொடங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று பிச்சாவரத்தில் நிறைவடைந்தது. தொடா்ந்து நடைபெற்ற விழாவில் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசளிக்கப்பட்டது.

ஈர நிலங்களை பாதுகாப்பதன் அவசியம், அவற்றின் பயன்கள் குறித்து உதவி வனப் பாதுகாவலா் பாலசுப்பிரமணியன், முதுநிலை விஞ்ஞானி நாகராஜன், கடல்வாழ் உயிரின உயராய்வு மைய இயக்குநா் கலைச்செல்வன், முனைவா் சண்முகம் உள்ளிட்டோா் பேசினா். வனக் காப்பாளா்கள் ராஜேஷ்குமாா், அபிராமி, சரண்யா, சரளா, வனக் காவலா்கள் ராஜசேகா், பாலகிருஷ்ணன், முத்துக்குமரன் உள்ளிட்டோா் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்தனா். வனவா் அருள்தாஸ் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com