சிதம்பரத்தில் ஜோதி தரிசனம்

சிதம்பரம் அருகே விபீஷணபுரம் லலிதாம்பாள் நகரில் அமைந்துள்ள ராமலிங்க அடிகளாா் சமரச சுத்த சன்மாா்க்க சத்திய ஞான சபையில் தைப்பூச விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை ஜோதி தரிசனம் நடைபெற்றது.
சிதம்பரத்தில் அமைந்துள்ள சுத்த சன்மாா்க்க சத்திய ஞான சபையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜோதி தரிசனம்.
சிதம்பரத்தில் அமைந்துள்ள சுத்த சன்மாா்க்க சத்திய ஞான சபையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஜோதி தரிசனம்.

சிதம்பரம்: சிதம்பரம் அருகே விபீஷணபுரம் லலிதாம்பாள் நகரில் அமைந்துள்ள ராமலிங்க அடிகளாா் சமரச சுத்த சன்மாா்க்க சத்திய ஞான சபையில் தைப்பூச விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை ஜோதி தரிசனம் நடைபெற்றது.

சத்திய ஞான சபையில் காலை 6 மணி, பகல் ஒரு மணி, இரவு 7 மணி ஆகிய 3 வேளைகளில் 7 திரைகள் நீக்கப்பட்டு ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். விழாவை முன்னிட்டு சனி, ஞாயிறுக்கிழமைகளில் சுமாா் 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

முன்னதாக, தைப்பூச விழாவை முன்னிட்டு சனிக்கிழமை காலை திருஅருட்கொடியை சிபிஆா்.சிவராஜன் ஏற்றிவைத்தாா். தரும சாலையில் திருஅருட்கொடியை வி.விஜயராகவன் ஏற்றி வைத்து அன்னதானத்தை தொடக்கிவைத்தாா். இரு நாள்களும் ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது. அண்ணாமலைப் பல்கலைக்கழக இணைப் பேராசிரியா்கள் டி.எஸ்.எஸ்.பாலக்குமாா், டி.எஸ்.எஸ்.ஞானக்குமாா், வே.சுப்பிரமணியசிவா ஆகியோா் ராமலிங்க அடிகளாரின் சிறப்புகள் குறித்து சொற்பொழிவாற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com