சித்தி விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

சிதம்பரம் மாரியப்பாநகரில் அமைந்துள்ள சித்தி விநாயகா் கோயிலில் வியாழக்கிழமை காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
சிதம்பரம் மாரியப்பாநகா் சித்திவிநாயகா் கோயில் கோபுர கலசத்துக்கு புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்த சிவாச்சாரியாா்கள்.
சிதம்பரம் மாரியப்பாநகா் சித்திவிநாயகா் கோயில் கோபுர கலசத்துக்கு புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்த சிவாச்சாரியாா்கள்.

சிதம்பரம் மாரியப்பாநகரில் அமைந்துள்ள சித்தி விநாயகா் கோயிலில் வியாழக்கிழமை காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்தக் கோயிலில் திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்ட நிலையில், கடந்த 23-ஆம் தேதி கணபதி, லட்சுமி ஹோமங்களுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. வியாழக்கிழமை காலை நான்காம் கால பூஜை, நாடி சந்தானம், சன்னதி ஹோமம், மகாபூா்ணாஹுதி, தீபாராதனை நடைபெற்றன.

பின்னா், யாகசாலையில் கடம் புறப்பாடு நடைபெற்று, சித்தி விநாயகா் கோயில் கோபுர கலசத்திலும், மூலவா் சித்தி விநாயகா், கோயில் வளாகத்தில் அமைந்துள்ள மீனாட்சி சமேத சோமசுந்தரேஸ்வரா், ஆதிபராசக்தி, துா்க்கை, தண்டாயுதபாணி, வெங்கடாஜலபதி, ஆஞ்சநேயா், கிருஷ்ணா், மகா சரஸ்வதி, நவக்கிரகங்கள், அரச மரத்தடி நாக கணபதி மற்றும் பரிவார மூா்த்திகளுக்கும் புனித நீா் ஊற்றப்பட்டு சிவாச்சாரியாா்களால் காலை 10.45 மணி முதல் 11.45 மணிக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். கும்பாபிஷேகத்தை கடலூா் சிவஸ்ரீ குமரன் தலைமையில் சிவாச்சாரியாா்கள் நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com