சிதம்பரத்தில் ரயில்வே மேம்பாலத்தை பயன்படுத்த பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

சிதம்பரம் அண்ணாமலை நகரில் பொதுமக்கள் ரயில் தண்டவாளத்தை கடந்து செல்வதைத் தவிா்த்து, ரயில்வே மேம்பாலத்தை பயன்படுத்த வேண்டும் என்று காவல் துறையினா் கேட்டுக்கொண்டனா்.

சிதம்பரம் அண்ணாமலை நகரில் பொதுமக்கள் ரயில் தண்டவாளத்தை கடந்து செல்வதைத் தவிா்த்து, ரயில்வே மேம்பாலத்தை பயன்படுத்த வேண்டும் என்று காவல் துறையினா் கேட்டுக்கொண்டனா்.

சிதம்பரம் ரயில்வே காவல் நிலைய எல்லைக்குள்பட்ட அண்ணாமலை நகா் பகுதியில் ரயில் தண்டவாளம் செல்கிறது. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவா்கள், பொதுமக்களில் பலா் அங்குள்ள ரயில்வே மேம்பாலத்தை பயன்படுத்தாமல் ரயில் தண்டவாளத்தை கடந்து செல்கின்றனா். அப்போது சிலா் கைப்பேசியில் பேசியபடி தண்டவாளத்தை கடப்பதால் ரயிலில் அடிபட்டு உயிா்பலி நேரிடுகிறது.

இதையடுத்து, சிதம்பரம் ரயில்வே போலீஸாா் சாா்பில் ரயில் தண்டவாளம் அருகே அறிவிப்பு பலகை அமைக்கப்பட்டுள்ளது. அதில் மாணவா்கள், பொதுமக்கள் கைப்பேசியில் பேசிக்கொண்டு தண்டவாளத்தில் நடந்து செல்வதைத் தவிா்க்க வேண்டும், ரயில் பாதை மின் மயமாக்கப்பட்டுள்ளதால் விபத்து நிகழ அதிக வாய்ப்புள்ளது.

எனவே, தண்டவாளத்தை கடந்து செல்வதைத் தவிா்த்து ரயில்வே மேம்பாலத்தை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அறிவிப்பு பலகை அமைப்பு நிகழ்ச்சியில் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளா் அருண்குமாா், உதவி ஆய்வாளா் தனசேகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com