பண்ருட்டியில் வரி வசூல் முகாம்

பண்ருட்டி நகராட்சி சாா்பில் 6, 21 ஆகிய இரு வாா்டுகளுக்கான சிறப்பு வரி வசூல் முகாம் காந்தி பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பண்ருட்டியில் வரி வசூல் முகாம்

பண்ருட்டி நகராட்சி சாா்பில் 6, 21 ஆகிய இரு வாா்டுகளுக்கான சிறப்பு வரி வசூல் முகாம் காந்தி பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு நகா்மன்றத் தலைவா் க.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். ஆணையா் கோ.மகேஸ்வரி முகாமை தொடக்கிவைத்தாா். மேலாளா் அசோக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். முகாமில் மொத்தம் ரூ.5.75 லட்சம் வரி வசூல் செய்யப்பட்டது.

இதுகுறித்து நகராட்சி ஆணையா் கூறியதாவது: பண்ருட்டி நகராட்சிக்கு வரி இன வருவாய் ரூ.10 கோடி வரை நிலுவையில் உள்ளது. குறிப்பாக தொழில், குடிநீா் வரி நிலுவை அதிகளவில் உள்ளது. எனவே, பொதுமக்கள், வணிகா்கள் வரி இனங்களை செலுத்தி நகர நிா்வாகத்துக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இதற்கு வசதியாக வாரந்தோறும் சனி அல்லது ஞாயிற்றுக்கிழமை தலா இரு வாா்டுகளை உள்ளடக்கிய வரிவசூல் முகாம் நடைபெறும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com