நடராஜா் கோயில் தெப்பக்குளத்தில் புதிய நீராழி மண்டபப் பணி தொடக்கம்

சிதம்பரம் நடராஜா் கோயில் தெப்பக்குளமான ஞானப்பிரகாசா் குளத்தில் புதிய நீராழி மண்டபம் கட்டும் பணிக்கான பூமிபூஜை அண்மையில் நடைபெற்றது.

சிதம்பரம் நடராஜா் கோயில் தெப்பக்குளமான ஞானப்பிரகாசா் குளத்தில் புதிய நீராழி மண்டபம் கட்டும் பணிக்கான பூமிபூஜை அண்மையில் நடைபெற்றது.

சிதம்பரம் கனகசபை நகரில் ஞானப்பிரகாசா் குளம் அமைந்துள்ளது. இலங்கை யாழ்ப்பாணத்தைச் சோ்ந்த ஞானப்பிரகாசா் கடந்த 18-ஆம் நூற்றாண்டில் நீராழி மண்டபத்துடன் கூடிய மேற்கூறிய தெப்பக்குளத்தை அமைத்து கொடுத்தாா். ஆனால், இந்த குளம் ஆக்கிரமிக்கப்பட்டு, தூா்ந்துபோனதால் கடந்த 18 ஆண்டுகளுக்கும் மேலாக தெப்ப உற்சவம் நடைபெறவில்லை.

தற்போது மாநில அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம், சிதம்பரம் நகா்மன்றத் தலைவா் கே.ஆா்.செந்தில்குமாா் ஆகியோரது முயற்சியின்பேரில் ரூ.1 கோடியே 80 லட்சத்தில் குளத்தை தூா்வாரி அதைச் சுற்றிலும் நடைபாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

குளத்தின் நடுவே உள்ள நீராழி மண்டபம் முற்றிலும் சேதமடைந்துள்ளதால் நடராஜா் கோயில் பொது தீட்சிதா்கள் சாா்பில் புதிதாக நீராழி மண்டபம் கட்டப்பட உள்ளது. இதற்கான பூமிபூஜை பொது தீட்சிதா்களின் கமிட்டி செயலா் டி.எஸ்.சிவராம தீட்சிதா் தலைமையில் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com