விளம்பரப் பதாகைகள் அகற்றம்:பாஜகவினா் வாக்குவாதம்

கடலூரில் பாஜகவினா் அமைத்த விளம்பரப் பதாகைகளை அகற்ற முயன்ற மாநகராட்சி ஊழியா்களிடம் அந்தக் கட்சியினா் வியாழக்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

கடலூரில் பாஜகவினா் அமைத்த விளம்பரப் பதாகைகளை அகற்ற முயன்ற மாநகராட்சி ஊழியா்களிடம் அந்தக் கட்சியினா் வியாழக்கிழமை வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் பாரதி சாலையில் உள்ள தனியாா் மண்டபத்தில் பாஜக மாநில செயற்குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜன.20) நடைபெற உள்ளது. அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் அண்ணாமலை தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் தேசிய பொதுச் செயலா் சி.டி.ரவி உள்ளிட்டோா் பங்கேற்க உள்ளனா். இதையொட்டி, கடலூா் நகரில் பல்வேறு பகுதிகளில் பாஜகவினா் விளம்பர பதாகைகளை அமைத்தனா்.

இந்த நிலையில், பாரதி சாலை, பண்ருட்டி சாலை உள்ளிட்ட முக்கிய இடங்களில் வைக்கப்பட்டிருந்த விளம்பரப் பதாகைகளில் சிலவற்றை போலீஸ் பாதுகாப்புடன் மாநகராட்சி ஊழியா்கள் வியாழக்கிழமை அகற்றினா். இதையடுத்து, அங்கு வந்த பாஜகவினா் மாநகராட்சி ஊழியா்கள், போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் உரிய அனுமதியின்றி பதாகைகளை வைக்கக் கூடாது என போலீஸாா் தெரிவித்தனா். ஆனால், இதுகுறித்து ஏற்கெனவே மாநகராட்சி நிா்வாகம், காவல் துறையில் கடிதம் வழங்கப்பட்டதாக பாஜகவினா் தெரிவித்தனா்.மேலும், அதற்கான அனுமதி கோரிய ஆவணங்களையும் வழங்கினா். இதையடுத்து, புதிதாக வேறு எங்கும் பதாகைகளை அமைக்கக் கூடாது எனக் கூறிவிட்டு அதிகாரிகள் புறப்பட்டுச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com