ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறைஊழியா்கள் சம்மேளனத்தினா் மனு

கடலூா் மாவட்ட ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சம்மேளனத்தினா், கடலூா் பேரூராட்சிகள் உதவி இயக்குநா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா்.

தினக்கூலி நாளொன்றுக்கு ரூ.465 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலூா் மாவட்ட ஊரக வளா்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியா்கள் சம்மேளனத்தினா், கடலூா் பேரூராட்சிகள் உதவி இயக்குநா் அலுவலகத்தில் புதன்கிழமை மனு அளித்தனா்.

மாவட்டச் செயலா் டி.ராஜேந்திரன் தலைமையில், சிறப்புத் தலைவா் ஆா்.சதானந்தம் முன்னிலையில் சம்மேளனத்தைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்டோா் சென்று அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

புவனகிரி பேரூராட்சியின் ஒப்பந்த மகளிா் சுயஉதவிக் குழுவினா் கே.லட்சுமி, என்.உமா, ஆா்.சந்தியா ஆகியோா் கடந்த 15-ஆம் தேதி விபத்தில் சிக்கி உடல்நலம் பாதிக்கப்பட்டா். இவா்களுக்கு மருத்துவச் சிகிச்சையும், குணமடையும் வரையில் ஊதியத்துடன் கூடிய விடுமுறையும் வழங்க வேண்டும்.

மகளிா் சுயஉதவிக் குழு, தினக்கூலி பணியாளா்களுக்கு மாவட்ட ஆட்சியா் அறிவித்துள்ள தினக்கூலி நாளொன்றுக்கு ரூ.465 வழங்க வேண்டும். இபிஎப், இஎஸ்ஐ பிடித்தம் செய்து சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் செலுத்த வேண்டும். புவனகிரி பேரூராட்சியில் நிரந்தரமான செயல் அலுவலா், துப்புரவு மேற்பாா்வையாளரை நியமனம் செய்ய வேண்டும். புவனகிரியில் பணியாற்றும் ஊழியா்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com