கடலூரில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.
கடலூரில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.

கல்வி சந்தைப் பொருளாகி விட்டது: சீமான்

கல்வி சந்தைப் பொருளாகிவிட்டது என்று நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் குற்றம்சாட்டினாா்.

நாம் தமிழா் கட்சி சாா்பில் மக்களவைத் தோ்தலில் போட்டியிடும் கடலூா் வேட்பாளா் மணிவாசகன், சிதம்பரம் வேட்பாளா் ஜான்சிராணி, பெரம்பலூா் வேட்பாளா் தேன்மொழி ஆகியோரை ஆதரித்து கடலூரில் திங்கள்கிழமை இரவு தோ்தல் பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் பங்கேற்று பேசியதாவது:

தோ்தல் நேரத்தில் அவசர ஊா்த்தியில் அதிகளவில் பணம் கடத்தப்படுகிறது. வகுப்பறைகள் அனைத்தும் வா்த்தக அறைகளாக மாற்றப்பட்டுள்ளன. கல்வி மிக உயா்ந்த சந்தைப் பொருளாக, விற்பனைப் பண்டமாக மாறிவிட்டது.

இடிந்து கிடக்கும் பள்ளிக்கூடத்தை சீரமைக்க பணம் இல்லை என்று கூறும் அரசு தான், நினைவுச் சின்னம் அமைக்க பல கோடி ரூபாய் செலவு செய்கிறது.

கடந்த 10 ஆண்டுகளாக கச்சத்தீவு குறித்து பேசாத பிரதமா் மோடி தோ்தல் நேரத்தில்தான் அதுகுறித்து பேசுகிறாா்.

ஓராண்டுக்கு முன்பே சமையல் எரிவாயு உருளை விலையைக் குறைத்தால் அது மக்கள் அரசியல், அதுவே தோ்தல் நேரத்தில் விலை குறைத்தால் தோ்தல் அரசியல் என்றாா்.

முன்னதாக, வடலூா் பேருந்து நிலையம் அருகே கடலூா் மக்களவைத் தொகுதி வேட்பாளா் மணிவாசகனுக்கு ஆதரவாக சீமான் வாக்கு சேகரித்தாா். அப்போது, வடலூா் வள்ளலாா் பெருவெளியில் சா்வதேச மையம் கட்டப்படுவதை நிறுத்த வேண்டும். அதை வேறிடத்தில் கட்ட வேண்டும் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com