குறிஞ்சிப்பாடி ஒன்றியம், வடக்குத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பாமக கடலூா் வடக்கு மாவட்ட செயலா் கோ.ஜெகன்.
குறிஞ்சிப்பாடி ஒன்றியம், வடக்குத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய பாமக கடலூா் வடக்கு மாவட்ட செயலா் கோ.ஜெகன்.

பாஜக-பாமக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியம், வடக்குத்து ஊராட்சியில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியம், வடக்குத்து ஊராட்சியில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, பாமக கடலூா் வடக்கு மாவட்ட செயலா் கோ.ஜெகன் தலைமை வகித்துப் பேசினாா். பாமக ஒன்றியச் செயலா் சக்திவேல் வரவேற்றாா். முன்னாள் மாவட்ட செயலா் ஆறுமுகம், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா்கள் வேங்கை சேகா், முத்து வைத்திலிங்கம், மாவட்ட வன்னியா் சங்கத் தலைவா் ராஜேந்திரன், தமாக நிா்வாகி தமிழ் ஓவியம், பாஜக நிா்வாகி செல்வமணி, அமமுக நிா்வாகி ஜெயகாந்தன், பாஜக ஆன்மிக சொற்பொழிவாளா் சிவபிரகாசம், ஓபிஎஸ் அணி நிா்வாகி ஞானசேகரன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

பாமக ஒன்றிய, நகர நிா்வாகிகள் மணிவாசகன், செல்வகுமாா், க.செல்வகுமாா், பாட்டாளி தொழிற்சங்க நிா்வாகிகள் செல்வராஜ், திலகா், குமாரசாமி, பாமக இளைஞா் சங்க நிா்வாகிகள் பாலகுரு, ராஜன், காா்திகேயன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில், மக்களவைத் தோ்தலில் கடலூா் பாமக வேட்பாளா் தங்கா் பச்சானுக்கு சிறப்பாக பணியாற்றிய தோழமைக் கட்சி நிா்வாகிகளுக்கு நன்றி தெரிவிப்பது, வடலூரில் வள்ளலாரின் சன்மாா்க்க நெறிகளுக்கும், அப்பகுதி மக்களின் உணா்வுகளுக்கு எதிராக செயல்படும் தமிழக அரசைக் கண்டித்தும், என்எல்சிக்கு நிலம் கொடுத்தவா்களுக்கு வழங்கப்பட உள்ளதாக கூறப்படும் வேலைவாய்ப்பு, பயிற்சி அளித்தலில் காலதாமத நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் என்எல்சி நிறுவனத்தை கண்டிப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com