கடலூா் தேவனாம்பட்டினம் வெள்ளிக்கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை மாலை குவிந்த பொதுமக்கள்.
கடலூா் தேவனாம்பட்டினம் வெள்ளிக்கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை மாலை குவிந்த பொதுமக்கள்.

சுட்டெரிக்கும் வெயில்: கடற்கரையில் குவிந்த பொதுமக்கள்

கடலூரில் சுட்டெரிக்கும் கோடை வெயிலுக்கு இதமாக, தேவனாம்பட்டினம் வெள்ளிக்கடற்கரையில் ஏராளமான பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை குவிந்தனா்.

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் முன்னெப்போதும் இல்லாத வகையில் தொடக்கத்திலேயே அதிகரித்து காணப்படுகிறது. காலை 10 மணிக்கு மேல் வெயில் தாக்கம் உச்சமாக இருக்கிறது.

நிகழாண்டு வெப்பத்தின் அளவு அதிகரித்து காணப்படும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. பொதுமக்கள் உரிய வழிமுறைகளை பின்பற்றி வெப்பத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள மாவட்ட நிா்வாகம் அறிவுரைகளை வழங்கியுள்ளது.

இந்த நிலையில், கோடை வெயிலுக்கு இதமாக, மாலை நேரங்களில் நீா்நிலைகள், பசுமை நிறைந்த பூங்காக்களில் பொதுமக்கள் கூடி வருகின்றனா். அந்த வகையில், விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை காலை முதலே கடலூா் தேவனாம்பட்டினம் வெள்ளிக்கடற்கரைக்கு ஏராளமான பொதுமக்கள் குடும்பத்தினருடன் வந்திருந்தனா். சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரையில் கடலில் குளித்து மகிழ்ந்தனா். பொதுமக்கள் கூட்டம் அதிகம் இருந்ததால் பாதுகாப்புப் பணியில் போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com