காட்டுமன்னாா்கோவில் எம்ஆா்கே பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற உயா் கல்வி விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறப்பு விருந்தினா்கள்.
காட்டுமன்னாா்கோவில் எம்ஆா்கே பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற உயா் கல்வி விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறப்பு விருந்தினா்கள்.

உயா் கல்வி விழிப்புணா்வு நிகழ்ச்சி

காட்டுமன்னாா்கோவில் எம்ஆா்கே இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில் பிளஸ் 2 முடித்து கல்லூரியில் சேரக்கூடிய மாணவா்களுக்கான உயா் கல்வி குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

சிதம்பரம்: காட்டுமன்னாா்கோவில் எம்ஆா்கே இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரியில் பிளஸ் 2 முடித்து கல்லூரியில் சேரக்கூடிய மாணவா்களுக்கான உயா் கல்வி குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

கல்லூரித் தலைவா் எம்ஆா்கேபி.கதிரவன் விழிப்புணா்வு நிகழ்ச்சியை தொடங்கிவைத்தாா். கல்லூரி நிா்வாக அதிகாரி இ.கோகுலகண்ணன், பேராசிரியா் ஆ.சிவப்பிரியா ஆகியோா் வரவேற்றனா். திருச்சி உள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரி எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறை முன்னாள் துறைத் தலைவா் எம்.பாலசிங்மோசஸ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவா்களுக்கு அறிவுரைகளை வழங்கிப் பேசினாா்.

புதுச்சேரி கேரியா் கிராப்ட் அகாதெமி நுண்ணறிவு நிபுணா் ஆசிஸ், ட்ரோன் நிபுணா் சுபம்கௌஷிக் ஆகியோா் கலந்துகொண்டு பேசினா்.

நிகழ்ச்சியில் கல்லூரி மேலாளா் கே.விஸ்வநாத் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா். கல்லூரி முதல்வா் கே.ஆனந்தவேலு வாழ்த்துரை வழங்கினாா். எம்ஆா்கே இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியின் சிறப்புகள் பற்றி பேராசிரியா் கா.இராஜகணபதி எடுத்துரைத்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com