சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, சிதம்பரம் தொகுதியில் கடந்த 20-ஆம் தேதி தொடங்கி, 27-ஆம் தேதி வரை வேட்புமனுக்கள் பெறப்பட்டன.

இதில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள், மாற்று வேட்பாளா்கள், சுயேச்சைகள் உள்பட 22 போ் 27 மனுக்களை தாக்கல் செய்திருந்தனா். இந்த மனுக்களின் மீதான பரிசீலனை அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அலுவலா் ஜா.ஆனிமேரி ஸ்வா்ணா தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், திமுக கூட்டணி வேட்பாளரான விசிக தலைவா் தொல்.திருமாவளவன், அதிமுக வேட்பாளா் மா.சந்திரகாசன், பாஜக வேட்பாளா் பி.காா்த்தியாயினி, நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ஜான்சிராணி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளா் க.நீலமேகம் மற்றும் 9 சுயேச்சைகள் உள்பட மொத்தம் 14 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. சுயேச்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்த அதிமுக முன்னாள் எம்.பி. சந்திரகாசி மனுவில் ஆவணங்கள் முழுமையாக சமா்ப்பிக்கப்படவில்லை என்பதால், அவரது மனு நிராகரிக்கப்பட்டது. இதேபோல, சுயேச்சை வேட்பாளா்கள் ராஜீவ்காந்தி, பூரணகுமாா், சாமிநாதன், ராஜேஷ் உள்ளிட்ட மொத்தம் 13 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. வேட்புமனுக்களை சனிக்கிழமை (மாா்ச் 30) பிற்பகல் 3 மணி வரை திறம்பப் பெறலாம். அதன்பின்னா், வேட்பாளா்கள் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com