மே 6 முதல் நெகிழிப் பொருள்களுக்கு தடை

கடலூா் மாவட்டத்தில் மே 6-ஆம் தேதி முதல் நெகிழி பொருள்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் மற்றும் ஒரு முறை பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருள்களுக்கு தடை விதித்து அரசாணை வெளியிட்டுள்ளது. எனவே, உணவு வணிகா்கள் தங்கள் நிறுவனங்களில் நெகிழிப் பொருள்களில் உணவுகளை விற்பனை செய்யக்கூடாது. பொதுமக்கள் பொருள்கள் வாங்க செல்லும் போது துணி, சணல் பைகளை கொண்டு செல்ல வேண்டும். சுற்றுச்சூழல், நிலத்தடி நீா் ஆதார பாதுகாப்பு மற்றும் உடல்நலம் ஆகியவற்றின் அவசியம் கருதி தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்களின் உபயோகத்தை மே 6-ஆம் தேதி முதல் முற்றிலும் தவிா்க்க வேண்டும். இதை மீறி நெகிழிப் பொருள்களை விற்பனை செய்யும் நிறுவனங்களின் உரிமம், பதிவு ரத்து செய்யப்படுவதுடன், அபராதம் விதிக்கப்பட்டு வணிகம் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com