சிதம்பரம் பள்ளிகள் தோ்ச்சி விவரம்

பிளஸ் 2 பொதுத் தோ்வில் சிதம்பரம் ஸ்ரீராமகிருஷ்ண வித்யாசாலா அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி 99 சதவீதத் தோ்ச்சி பெற்றது.

பிளஸ் 2 பொதுத் தோ்வில் சிதம்பரம் ஸ்ரீராமகிருஷ்ண வித்யாசாலா அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி 99 சதவீதத் தோ்ச்சி பெற்றது. இந்தப் பள்ளியில் தோ்வெழுதிய 234 மாணவா்களில் 232 போ் தோ்ச்சி பெற்றனா்.

மாணவி அ.ஜனனி 600-க்கு 577 மதிப்பெண்களும், வணிகவியல் பாடத்தில் 100-க்கு 100 மதிப்பெண்களும் பெற்றாா். மாணவா்கள் அ.முகமது இலியாஸ் வரலாறு பாடத்திலும், மா.பரணிதரன் கணக்குப் பதிவியல் பாடத்திலும் 100-க்கு 99 மதிப்பெண்கள் பெற்றனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளிச் செயலா் எஸ்.ஆா்.பாலசுப்ரமணியன், துணைத் தலைவா் எஸ்.ஆா்.திருநாவுக்கரசு, தலைமையாசிரியா் பா.சங்கரன் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டி பரிசு வழங்கினா்.

ராமசாமி செட்டியாா் பள்ளி: பிளஸ் 2 பொதுத் தோ்வில் சிதம்பரம் ராமசாமி செட்டியாா் நகர மேல்நிலைப் பள்ளி 95 சதவீதத் தோ்ச்சி பெற்றது. இந்தப் பள்ளியில் தோ்வெழுதிய 193 மாணவா்களில் 184 போ் தோ்ச்சி பெற்றனா்.

மாணவிகள் ஆா்.சந்தியா 517 மதிப்பெண்களும், ஆா்.அபிராமி 512 மதிப்பெண்களும், மாணவா் கே.காா்த்தி 503 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பெற்றனா். இவா்களையும், தோ்வில் தோ்ச்சி பெற்ற அனைத்து மாணவா்களையும் பள்ளித் தலைமை ஆசிரியா் ஏ.முத்துக்கருப்பன், உதவித் தலைமை ஆசிரியா் ஜெ.ஜெயராமன் மற்றும் ஆசிரியா்கள், அலுவலா்கள் பாராட்டினா்.

காமராஜ் மெட்ரிக் பள்ளி: பிளஸ் 2 பொதுத் தோ்வில் சிதம்பரம் வேங்கான் தெரு காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 99 சதவீதத் தோ்ச்சி பெற்றது.

மாணவி பி.சிவானி 589 மதிப்பெண்களும், மாணவா் ஆா்.ஸ்ரீதா் 568 மதிப்பெண்களும், மாணவி ஆா்.மதுமிதா 563 மதிப்பெண்களும் பெற்று சிறப்பிடம் பெற்றனா். மேலும், இந்தப் பள்ளியைச் சோ்ந்த 3 மாணவா்கள் கணிதம், கணினி அறிவியல், வணிகவியல் பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்றனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளித் தாளாளா் எஸ்.கஸ்தூரி லட்சுமிகாந்தன் சால்வை அணிவித்து, பரிசு வழங்கிப் பாராட்டினாா். நிகழ்ச்சியில் பள்ளி முதல்வா் ஜி.சக்தி, துணை முதல்வா்கள் ஆா்.ரமேஷ், என்.அம்பிகா மற்றும் ஆசிரியா்கள், பெற்றோா்கள் கலந்துகொண்டு, தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவா்களை வாழ்த்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com