பண்ருட்டியில் வெள்ளரிப்பழம் விலை அதிகரிப்பு

பண்ருட்டியில் வெள்ளரிப்பழம் விலை அதிகரிப்பு

பண்ருட்டி பகுதிகளில் முன்பை விட நிகழாண்டு ஒரு கூடை வெள்ளரிப்பழம் ரூ.500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடலூா் மாவட்டம், ÷பண்ருட்டி வட்டாரத்தில் சிறுவத்தூா், வையாபுரிபட்டிணம், ஏரிப்பாளையம், அங்குசெட்டிப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 50 ஏக்கா் பரப்பளவுக்கு மேல் வெள்ளரி சாகுபடி செய்யப்படுகிறது. ÷கோடை காலத்துக்கு ஏற்ற மருத்துவ குணம் கொண்ட சிறந்த உணவு வெள்ளரி. வெள்ளரிப் பிஞ்சை பச்சையாகவும், சமைத்தும் சாப்பிடலாம். வெள்ளரிப் பழத்தை சா்க்கரை, வெல்லம் கலந்தும் சாப்பிடலாம்.

÷பண்ருட்டி பகுதி விவசாயிகள் விதை எடுப்பதற்காகவே வெள்ளரியை சாகுபடி செய்கின்றனா். வெள்ளரிப் பழத்தில் இருந்து விதைகளை எடுத்து காய வைத்து விற்பனை செய்கின்றனா். இதனை வியாபாரிகள் வீடு தேடி வந்து வாங்கிச் செல்கின்றனா். ÷தோல் நீக்கப்பட்ட வெள்ளரி விதையை பாக்கு மற்றும் இனிப்பு வகைகளில் சோ்க்கப்படுகிறது.

கடந்த காலங்களில் விதை நீக்கப்பட்ட வெள்ளரிப் பழத்தை கூடை ஒன்றுக்கு ரூ.150 முதல் 200 வரை பழ வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்பட்டன. இதன் மூலம் கிடைக்கும் வருவாய் தோட்டப் பராமரிப்பு, மருந்து மற்றும் ஆள் கூலி உள்ளிட்ட செலவுகளை ஈடுகட்டும்.

தண்ணீா் பிரச்னை, வெள்ளரி சாகுபடி குறைவு உள்ளிட்ட காரணங்களால் நிகழாண்டு ஒரு கூடை வெள்ளரிப்பழம் ரூ.500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனை வாங்கி வரும் வியாபாரிகள் கிலோ ஒன்று ரூ.50-க்கு வீதிகளில் விற்பனை செய்கின்றனா். கோடை வெயில் அதிகரித்துள்ள நிலையில் வெள்ளரிப் பழத்தின் விலை உயா்ந்துள்ளது. இதேபோல, நுங்கு ஒன்று ரூ.5, இளநீா் ரூ.30 முதல் 40 வரையிலும், தா்பூசணி கிலோ ரூ.20 முதல் 40 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com