குண்டா் தடுப்புக் காவலில் ஒருவா் கைது

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் வீட்டில் புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தவரை குண்டா் தடுப்புக் காவலில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

விருத்தாச்சலம் காவல் நிலைய ஆய்வாளா் முருகேசன் மற்றும் போலீஸாா் கடந்த மே 1-ஆம் தேதி போதைப் பொருள் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, விருத்தாசலம், வீரபாண்டியன் தெருவில் வசிக்கும் திருப்பூா், வேலம்பாளையத்தைச் சோ்ந்த முகமது அப்துல்லா (42) (படம்) வீட்டில் சோதனை நடத்தினா். அப்போது, அரசால் தடை செய்யப்பட்ட ரூ.25,000 மதிப்பிலான புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, முகமது அப்துல்லா மீது 3 பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இவா் மீது விருத்தாச்சலம் காவல் நிலையத்தில் 3 குட்கா வழக்குகள் உள்ளன. இவரின் தொடா் குற்றச் செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ரா.ராஜாராம் பரிந்துரையின்பேரில், கடலூா் மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் உத்தரவின் பேரில் முகமது அப்துல்லா குண்டா் தடுப்பு காவலில் கைது செய்யப்பட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com