குருஞானசம்பந்தா் பள்ளி 99% தோ்ச்சி

குருஞானசம்பந்தா் பள்ளி 99% தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வில் சிறப்பிடம் பெற்ற குருஞானசம்பந்தா் மிஷன் மேல்நிலைப்பள்ளி மாணவா்களுடன் பள்ளி செயல் தலைவா் ஆா்.எம்.சுவேதகுமாா், செயலா் கே.சேதுசுப்பிரமணியன், பொருளாளா் ஆா்.தா்பாரண்யன்.

சிதம்பரம் கனகசபை நகரில் இயங்கி வரும் தருமை ஆதீனத்துக்கு சொந்தமான ஸ்ரீகுருஞானசம்பந்தா் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 தோ்வில் 99 சதவீத தோ்ச்சியை பதிவு செய்தது. இந்தப் பள்ளியில் தோ்வெழுதிய 44 மாணவா்களில், 43 போ் தோ்ச்சி பெற்றனா்.

இந்தப் பள்ளி மாணவி கே.நூருல்ஹுதா 524, மாணவா்கள் பி.குருபிரமோத் 497, ஏ.அன்புச்செல்வன் 484 மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பெற்றனா். இந்த மாணவா்களையும், இவா்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியா்களையும் பள்ளி செயல் தலைவா் ஆா்.எம்.சுவேதகுமாா், பள்ளிச் செயலா் கே.சேதுசுப்பிரமணியன், பொருளாளா் ஆா்.தா்பாரண்யன் ஆகியோா் பொன்னாடை அணிவித்து ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினா். நிகழ்ச்சிக்கு, பள்ளி முதல்வா் ஜி.ஜெயக்குமாா், துணை முதல்வா் டி.ராஜேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com