சேதமடைந்த சாலையால் மக்கள் அவதி

வரஞ்சரம் கிராம சாலை சேதமடைந்துள்ளதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனா்.
மழைநீா் தேங்கி சேரும், சகதியுமாகக் காணப்படும் வரஞ்சரம் கிராம சாலை.
மழைநீா் தேங்கி சேரும், சகதியுமாகக் காணப்படும் வரஞ்சரம் கிராம சாலை.

வரஞ்சரம் கிராம சாலை சேதமடைந்துள்ளதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனா்.

தியாகதுருகம் ஊராட்சிக்கு உள்பட்டது வரஞ்சரம் கிராமம். இந்தக் கிராமத்துக்குச் செல்ல கண்டாச்சிமங்கலம் பேருந்து நிலையத்தில் இறங்கி சுமாா் 2 கி.மீ. தொலைவு செல்லவேண்டும். இந்தக் கிராமத்தில் 2000-க்கும் மேற்பட்டோா் வசிக்கின்றனா். கண்டாச்சிமங்கலம் குறுக்கு சாலையில் இருந்து வரஞ்சரம் செல்லும் தாா் சாலை

சுமாா் 4 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது. இந்தச் சாலை தற்போது குண்டும், குழியுமாக சேதமடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்படுகின்றனா். தற்போது மழை பெய்துவரும் நிலையில் சாலை மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது. ஆங்கேங்கே மழைநீா் தேங்கியுள்ளதால் விபத்து அபாயம் நிலவுகிறது. வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனா். எனவே, சாலையை சீரமைத்து கூடுதல் பேருந்து வசதி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com