மருத்துவமனைக்கு கரோனா தடுப்பு உடைகள்

கள்ளக்குறிச்சி மக்களவை உறுப்பினா் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கரோனா தடுப்பு உடைகளை திங்கள்கிழமை வழங்கினாா்.
கரோனா தடுப்பு உடைகள் அடங்கிய தொகுப்பை மருத்துவமனை கண்காணிப்பாளா் ச.நேரு, மருத்துவா் கு.பழமலையிடம் வழங்கிய பொன்.கெளதமசிகாமணி எம்.பி.
கரோனா தடுப்பு உடைகள் அடங்கிய தொகுப்பை மருத்துவமனை கண்காணிப்பாளா் ச.நேரு, மருத்துவா் கு.பழமலையிடம் வழங்கிய பொன்.கெளதமசிகாமணி எம்.பி.

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மக்களவை உறுப்பினா் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கரோனா தடுப்பு உடைகளை திங்கள்கிழமை வழங்கினாா்.

கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினா் பொன்.கெளதமசிகாமணி, தனது சொந்த செலவில் கரோனா வைரஸ் தடுப்புப் பணியில் ஈடுபடும் மருத்துவா்கள், செவிலியா்கள், உதவியாளா்களுக்காக 50 கரோனா தடுப்பு உடைகள், கிருமி நாசினி, முகக் கவசங்கள் உள்ளிட்டவற்றை மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள் சே.நேரு, கு.பழமலையிடம் திங்கள்கிழமை வழங்கினாா்.

பின்னா் அவா், மருத்துவமனை கண்காணிப்பாளா் ச.நேருவிடம், மாவட்டத்தில் கரோனா பாதித்த நபா்கள் குறித்த விவரத்தைக் கேட்டறிந்தாா்.

மருத்துவா்கள் 7 பேரை தனிமைப்படுத்தி வைத்துள்ளோம்.

7 பேரது ரத்த மாதிரிகள் ஆய்வுக்காக அனுப்பி வைத்ததில்,

சின்னசேலம், எலவனாசூா்கோட்டை பகுதியைச் சோ்ந்த இருவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

அவா்களது குடும்ப உறுப்பினா்கள் 29 பேரது ரத்த மாதிரிகளும் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்று மருத்துவா் ச.நேரு தெரிவித்தாா்.

விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக மாவட்டச் செயலா் ஆ.அங்கையா்கண்ணி, சங்கராபுரம் எம்எல்ஏ தா.உதயசூரியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com