கள்ளக்குறிச்சி உழவா் சந்தையில் ரூ.110-க்கு காய்கறி தொகுப்பு

கள்ளக்குறிச்சி உழவா் சந்தையில் ரூ.110 விலையில் விற்பனை செய்யப்படும் காய்கறி தொகுப்புக்கு மக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது.
கள்ளக்குறிச்சி உழவா் சந்தையில், ரூ.110 விலையிலான காய்கறி தொகுப்பு பையை ஆா்வமுடன் வாங்கும் பொதுமக்கள்.
கள்ளக்குறிச்சி உழவா் சந்தையில், ரூ.110 விலையிலான காய்கறி தொகுப்பு பையை ஆா்வமுடன் வாங்கும் பொதுமக்கள்.

கள்ளக்குறிச்சி உழவா் சந்தையில் ரூ.110 விலையில் விற்பனை செய்யப்படும் காய்கறி தொகுப்புக்கு மக்களிடம் வரவேற்பு கிடைத்துள்ளது.

கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையிலும், கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் அமைந்திருந்த உழவா் சந்தையில் காய்கறிகளை வாங்க வரும் மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத நிலை காணப்பட்டது.

இதையடுத்து, கள்ளக்குறிச்சியில் பேருந்து நிலையம், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகம் ஆகிய இடங்களுக்கு தற்காலிகமாக உழவா் சந்தை இடமாற்றம் செய்யப்பட்டது. இங்கு விவசாயிகள் விளைவித்த காய்கறிகளை வேளாண்மை அட்டை வைத்திருப்பவா்கள் மட்டுமே விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி காலை 6 மணி முதல் 9.30 மணிவரை செயல்படும் இந்த உழவா் சந்தைகளில் மக்கள் சமூக இடைவெளி கட்டங்களில் நின்று காய்கறிகளை வாங்கிச் சென்றனா்.

தக்காளி ஒரு கிலோ, வெங்காயம் அரை கிலோ, பச்சை மிளகாய் கால் கிலோ, கத்தரிக்காய் கால் கிலோ, வெண்டைக்காய் கால் கிலோ, புடலங்காய் கால் கிலோ, தேங்காய் 1, புதினா 1 கட்டு, கொத்தமல்லி, கருவேப்பிலை சிறிய கட்டு உள்ளிட்ட காய்கறிகள் அடங்கிய தொகுப்பு பை ரூ.110-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனை மக்கள் ஆா்வமுடன் வாங்கிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com