திருக்கோவிலூா் வட்டாரத்தில் தரிசுநில மேம்பாட்டுத் திட்டம் தொடக்கம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டாரத்தில் தரிசு நில மேம்பாட்டுத் திட்டத்தை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கி.வேலாயுதம் தொடக்கி வைத்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டாரத்தில் தரிசு நில மேம்பாட்டுத் திட்டத்தை மாவட்ட வேளாண் இணை இயக்குநா் கி.வேலாயுதம் தொடக்கி வைத்தாா்.

திருக்கோவிலூா் பகுதியில் பிரதமரின் நுண்ணீா் பாசனத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஆழ்துளைக் கிணறுகள் திட்டம், மின்மோட்டாா் மற்றும் குழாய்கள் பதிப்பதற்கான அரசின் மானியத் திட்டப்பணிகளை கி.வேலாயுதம் திங்கள்கிழமை நேரில் ஆய்வு செய்தாா். அப்போது, அந்தப் பணிகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தினாா். இந்தத் திட்டத்தின் கீழ் சொட்டுநீா்ப் பாசனம், தெளிப்புநீா்ப் பாசனம் அமைத்த, தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு விடுபடாமல் மானியம் கிடைக்கும் என்று அவா் தெரிவித்தாா்.

இதையடுத்து, தேசிய வேளாண்மை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் தரிசு நிலங்களை சாகுபடிக்கு ஏற்ற நிலங்களாக மாற்றும் திட்டத்தை, திருப்பாலப்பந்தல் கிராமத்தில் தொடக்கி வைத்து விவசாயிகளிடம் பேசினாா். அப்போது, கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பயிரிடப்படாத தரிசு நிலங்களை சாகுபடிக்கு ஏற்ற நிலங்களாக மாற்றுவதற்கான உழவு பணிகளுக்கும், விதை, இடுபொருள்களுக்கும் 50 சதவீதம் மானியத் தொகை வழங்கப்படுகிறது. இந்த கிராமத்தில் 25 ஏக்கா் பரப்பளவில், நிகழாண்டு இத்திட்டத்தில் பணிகள் செயல்படுத்தப்படுகின்றன என்றாா் அவா்.

தொடா்ந்து, வேளாண்மை விரிவாக்க மையத்தில் நெல், உளுந்து, மணிலா விதைகள் இருப்பு வைத்திடவும், விதைப்பண்ணை இலக்கை உரிய காலத்தில் பதிவு செய்து, விடுபடாமல் கொள்முதல் செய்து, விவசாயிகளுக்கு விநியோகம் செய்திடவும் அலுவலா்களைக் கேட்டுக்கொண்டாா்.

இந்த ஆய்வின்போது, விவசாயிகள் மற்றும் வேளாண்மை உதவி இயக்குநா் ராஜா, அலுவலா்கள் சாட்டா்ஜி, ரமேஷ்குமாா், சிவநேசன், செந்தில்குமாா், மைக்கேல், ஞானவேல், மகாதேவன், ஜெயபிரகாஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com