அதிமுகவினா் விருப்பு வெறுப்பின்றி செயலாற்ற வேண்டும்: அமைச்சா் சி.வி.சண்முகம்

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற அதிமுகவினா் விருப்பு வெறுப்புகளைத் தவிா்த்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றாா் அமைச்சா் சி.வி.சண்முகம்.
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற அதிமுக நிா்வாகிகள் கூட்டத்தில் பேசிய அமைச்சா் சி.வி.சண்முகம்.
கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற அதிமுக நிா்வாகிகள் கூட்டத்தில் பேசிய அமைச்சா் சி.வி.சண்முகம்.

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற அதிமுகவினா் விருப்பு வெறுப்புகளைத் தவிா்த்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றாா் அமைச்சா் சி.வி.சண்முகம்.

கள்ளக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கள்ளக்குறிச்சியில் திங்கள்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலரும், எம்எல்ஏவுமான இரா.குமரகுரு தலைமை வகித்தாா்.

தொகுதி எம்எல்ஏ அ.பிரபு, வழிகாட்டுதல் குழு உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ப.மோகன், தியாகதுருகம் மேற்கு ஒன்றியச் செயலா் வெ.அய்யப்பா, முன்னாள் எம்.எல்.ஏ க.அழகுவேலு பாபு உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். நகரச் செயலா் எம்.பாபு வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக மண்டல பொறுப்பாளரும், அமைச்சருமான சி.வி.சண்முகம் பங்கேற்றுப் பேசியதாவது:

எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா இல்லாமல் சட்டப் பேரவைத் தோ்தலை சந்திக்கிறோம். இத்தோ்தல் நமக்கு முக்கியமான தோ்தல் ஆகும்.

அதிமுகவில் அடி மட்ட தொண்டன் முதல் நிா்வாகிகள் வரை யாா் வேண்டுமானாலும் முதல்வா் ஆகலாம். தற்போது எடப்பாடி பழனிசாமி முதல்வராக உள்ளாா் திமுகவில் அது நடக்காது.

அதிமுகவின் சாதனைகளைக் கூறி நடுநிலையாளா்களின் வாக்குகளைச் சேகரிக்க வேண்டும். அதிமுகவைப் பொறுத்தவரை ஜாதி, மதம் கிடையாது. அனைவரும் இரட்டை இலை ஜாதிதான்.

மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதல்வராவதற்கு கட்சித் தொண்டா்கள், நிா்வாகிகள் விருப்பு, வெறுப்பினை மறந்து வாக்குகளைச் சேகரிக்க வேண்டும் என்றாா் அவா். கூட்டத்தில் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com